சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க.. இந்த பகுதிகளில் எல்லாம் ஒருநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னையின் அடையாறு, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 9 மணி முதல் மே 1 ஆம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னையில் மாநகராட்சி குழாய் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் வசிக்கும் மக்களில் பல லட்சக்கணக்கானவர்கள் மாநகராட்சி மூலமாக குழாய் மூலமாக விநியோகிக்கப்படும் இந்த குடீநீரையே நம்பி உள்ளனர். தங்கள் அன்றாட தேவைகள் அனைத்திற்கும் இந்த நீரையே மக்கள் பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது.

Water supply will be stopped on April 30 in Chennai Adyar Perungudi surrounding areas

மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள பகுதிகளில் வசிக்கும் பலருக்கும் ஒருநாள் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டாலே கடும் சிரமத்திற்கு உள்ளாவதை பார்க்க முடிகிறது. இதனால், சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய அவ்வப்போது, குடிநீர் வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த இரு தினங்களுக்கு முன்புதான், பராமரிப்பு பணிக்காக சென்னை பெரு மாநகராட்சியில் உள்ள 7 மண்டலங்களில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ஏப்ரல் 30 ஆம் தேதி காலை 9 மணி முதல் மே 1 ஆம் தேதி வரை தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் கூறியிருப்பதாவது:- நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் 30. 04. 2024 அன்று காலை 9 மணி முதல் 01. 05. 2024 அன்று காலை 9 மணி வரை (1 நாள் மட்டும்) மண்டலம் - 13 (பகுதி), 14 மற்றும் 15-க்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:
மண்டலம் - 13 (அடையாறு பகுதி)
கோட்டூர் கார்டன். ஆர்.கே.மடம் தெரு இந்திரா நகர் OHT
மண்டலம் - 14 (பெருங்குடி)
மண்டலம் - 15 (சோழிங்கநல்லூர்)
திருவான்மியூர், பள்ளிப்பட்டு

கொட்டிவாக்கம், பாலவாக்கம் பெருங்குடி,
பள்ளிக்கரணை, மடிப்பாக்கம்,
புழுதிவாக்கம் ஈஞ்சம்பாக்கம்,
நீலாங்கரை, அக்கரை, எழில் நகர் கண்ணகி நகர்,
காரப்பாக்கம், வெட்டுவான்கேணி சோழிங்கநல்லூர்,
செம்மஞ்சேரி ஒக்கியம்-துரைப்பாக்கம்
உள்ளிட்ட பகுதிகளில் ஒருநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+