Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓசி பயண சர்ச்சைகளுக்கு குட்டு.. மகளிருக்கான இலவச பஸ் பயணத் திட்டம் எங்கள் கடமை.. முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசுப் பேருந்தில் இலவச பயணத் திட்டத்தை கடமையாக நினைத்து செயல்படுத்துகிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் போன் விற்பனையாளரான பெகட்ரான் டெக்னாலஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை செங்கல்பட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதனை மகேந்திரா வேல்ர்டு சிட்டியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், உலக புகழ்பெற்ற பெகட்ரான் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழிற்சாலை தொடங்குவது பெருமை அளிக்கிறது. தைவான் நிறுவனம் மேலும் பல தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் தொடங்க வேண்டும்.

14 ஆயிரம் பேருக்கு வேலை

14 ஆயிரம் பேருக்கு வேலை

இந்த புதிய நிறுவனத்தால் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதன் மூலம் அந்த வட்டாரம், மாவட்டம் வளர்ச்சி அடைகிறது. பெண் தொழிலாளர்களுக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பெகட்ரான் நிறுவனம் கூறியுள்ளது. பெண்களை அதிகளவில் பணியமர்த்தினால் தமிழக அரசு பல மானியங்களை வழங்க பரிசீலித்து வருகிறது. அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பயணத் திட்டத்தை கடமையாக நினைத்து செயல்படுத்துகிறோம். .

18 மாதங்களில் உற்பத்தி

18 மாதங்களில் உற்பத்தி

புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட 18 மாதங்களில் பெகட்ரான் நிறுவனம் உற்பத்தியை தொடங்கவுள்ளது. இது தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களுக்கு ஆதரவான சூழல் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நிலம் ஒதுக்கீடு, வரையறுக்கப்பட்ட காலக்கட்டத்திற்குள் அனுமதி, ஊக்கத்தொகுப்பு சலுகை ஆகியவை உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

தமிழக அரசு முயற்சி

தமிழக அரசு முயற்சி

அகில இந்திய அளவில் வணிகம் செய்வதில் எளிதான மாநிலம் என்ற பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது. முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதேபோல் உற்பத்தியில், வர்த்தகத்தில், தொழிலில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்க ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

மின்னணுவியல் துறை

மின்னணுவியல் துறை

மின்னணுவியல் துறையில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. சாம்சங், டெல், சால்காம், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் என பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தி திட்டங்களை அமைத்ததுடன், விரிவாக்க திட்டங்களையும் இங்கு செயல்படுத்தி வருகின்றனர். எந்த துறையாக இருந்தாலும் அந்த துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக வேண்டும் என்பதே இலக்கு.

புதிய ஒப்பந்தம்

புதிய ஒப்பந்தம்

2030ம் ஆண்டுக்குள் நமது மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும் என்பதே லட்சிய இலக்கு. இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முயற்சியின் பலனாக, அண்மையில் மிகப்பெரிய செமி கண்டக்டர் உற்பத்தி திட்டத்தை தமிழ்நாட்டில் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கியதை ஓசி பயணம் என்ற வார்த்தையால் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் குறிப்பிட்டார். இதையடுத்து அதிமுக ஐடி விங்க் நிர்வாகி ஒருவர் மூதாட்டியை பேருந்தில் அழைத்துச் சென்று, எங்களுக்கு ஓசி பஸ் பயணம் வேண்டாம் என்று பேச வைத்து அதை வீடியோவாக எடுத்தார். அது வைரலாக சுற்றியது. இந்த நிலையில்தான், இது ஓசி இல்லை, கடமை என்ற தொனியில் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+