நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள்
சென்னை: தமிழகத்தின் மையப்பகுதி மாவட்டமான விழுப்புரம் அரசியல் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாத மாவட்டம். அதிமுக திமுக என இரண்டு கட்சிகளிலுமே சம பலம் வாய்ந்த தலைவர்கள் இருக்கும் பகுதி என்பதால் எப்போதுமே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த மாவட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இப்போது விழுப்புரம் மாவட்ட அதிமுக பரபரப்பால் பற்றி எரிகிறது.

சர்ச்சை நாயகன் சி.வி சண்முகம்.
அதிமுகவில் எத்தனையோ சர்ச்சை நாயகர்கள் இருந்தாலும் அவர்களில் சி.வி சண்முகத்திற்கு தனி இடம் உண்டு. அரசியல் ரீதியான விமர்சனங்களையே கொஞ்சம் காரஞ்சாரமாக வீசுவது சி.வி. சண்முகத்தின் பாணி. அப்படி பேசிவிட்டு பல்வேறு சமயங்களில் சிக்கலில் மாட்டிக் கொள்வதும் அவருக்கு வழக்கம். மற்றவர்களை சீண்டி பார்ப்பது தான் சி.வி. சண்முகத்திற்கு கைவந்த கலை என நாம் நினைத்துக் கொண்டிருக்கையில், தற்போது அவருக்கு எதிராக அதிமுககாரர்களே போர் கொடி தூக்கியிருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. பாஜக அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்று அடுத்ததாக வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிக்கும் வேலையில் அதிமுக தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு எதிராக விழுப்புரம் தெற்கு மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். குறிப்பாக விழுப்புரம் தெற்கு நகர செயலாளர் பசுபதி சி.வி சண்முகத்திற்கு எதிராக அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார். சி.வி சண்முகத்தின் மீதான குற்றச்சாட்டு பட்டியலை அதிமுக தலைமையிடம் வழங்குவோம் எனவும் அவர் சூளுரைத்திருக்கிறார்.
சி.வி சண்முகம் மீதான குற்றச்சாட்டுகள்
தற்போது நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மாவட்ட செயலாளர்கள் பரிந்துரைப்பவர்களுக்கு தான் வேட்பாளராக வாய்ப்பு கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கு சி.வி சண்முகம் பரிந்துரைக்க நினைத்திருக்கும் நபரின் வெற்றி வாய்ப்பு கேள்வி குறிதான் என்றும், மாவட்டத்தில் உள்ள அதிமுக காரர்களையும் நிர்வாகிகளையும் கலந்து ஆலோசிக்காமல் சி.வி. சண்முகம் தான்தோன்றித்தனமாக வேட்பாளரை பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டுகிறார் பசுபதி.
இவர் தன்னிச்சையாக வேட்பாளரை தேர்வு செய்திருப்பதற்கு அதிர்ச்சியான காரணங்களையும் கூறுகிறார் பசுபதி. கடந்த தேர்தலில் தான் தோற்றுவிட்ட விழுப்புரம் தொகுதியில் வேறு யாரும் ஜெயித்து விடக்கூடாது என நினைத்து டம்மியான ஒரு வேட்பாளரை பரிந்துரைக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் அதிரடி குற்றச்சாட்டை முன் வைக்கிறார் பசுபதி.
மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வன்னியர் சமூக ஓட்டுகள் அதிகம் இருக்கும் நிலையில், சி.வி. சண்முகமும் அதே சமூகத்தை சேர்ந்தவராக இருந்தும் வன்னியர்களுக்கு துரோகம் செய்கிறார் என குமுறுகிறார் பசுபதி. அதனால் தான் உடையார் சமூகத்தைச் சேர்ந்த திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் இரண்டு முறை மண்ணை கவ்வி இருக்கிறார் சி.வி சண்முகம் என தனது குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்க முயற்சிக்கிறார் பசுபதி.
நேற்று விழுப்புரத்தில் தனது ஆதரவாளர்களிடையே பேசிய விழுப்புரம் தெற்கு நகர செயலாளர் பசுபதி சில உணர்ச்சிகரமான கேள்விகளை முன் வைத்தார். பத்தாண்டுகளாக சி.வி. சண்முகம் அமைச்சராக இருந்தும் கட்சிக்காரர்களை கண்டு கொள்ளவில்லை என குற்றம் சாட்டிய அவர், அங்கிருந்து தனது ஆதரவாளர்களை பார்த்து எந்த வார்டு செயலாளரிடமாவது கார் இருக்கிறதா?... காரை விடுங்கப்பா எந்த வார்டு செயலாளர் வீட்டில் ஆவது நல்லதா இரண்டு சேர்கள் இருக்கிறதா என பரிதாபமாக கேள்வி எழுப்பினார்.
தான் முழு செல்வாக்கோடு இருந்தும் தன்னை நம்பியிருக்கும் கட்சிக்காரர்களுக்கு சி.வி சண்முகம் எதுவுமே செய்யவில்லை இனியும் செய்யப் போவதில்லை என குற்றம் சாட்டுகிறார் பசுபதி. அதோடு தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் சி.வி. சண்முகம் விழுப்புரம் தொகுதிக்கு இதுவரை எந்த ஒரு வேலையும் செய்யவில்லை எனவும், மயிலம் தொகுதிக்கு தான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக விழுந்து விழுந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் குறிப்பிடும் பசுபதி, மயிலம் தொகுதிக்கு மட்டும்தான் அவர் மாவட்ட செயலாளரா என்ற கேள்வியும் எழுப்பி உள்ளார்.
வரும் தேர்தலில் விழுப்புரம் தொகுதிக்கு சி.வி சண்முகம் பரிந்துரைக்க தயாராக இருக்கும் வேட்பாளருக்கே இதில் விருப்பமில்லை என கூறும் பசுபதி நம் கண்ணுக்குத் தெரிந்தே நம்முடைய தொகுதியில் அதிமுக தோல்வி அடைவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என தனது ஆதரவாளர்களிடையே பேசினார். அதோடு சிவி சண்முகத்தின் அடாவடிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி இடம் எடுத்துக் கூறுவதற்காகவும் அவரை நேரில் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறினார் . பூனைக்கு யார் மணி கட்டுவது என பயந்து பயந்து கொண்டு இருந்தால் சிவி. சண்முகத்தின் கொட்டத்தை அடக்க முடியாது...என்மேல் நடவடிக்கை பாய்ந்தாலும் சரி...விழுப்புரத்தில் அதிமுக என்னும் பேரியக்கம் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக தான் பலிகடா ஆனாலும் பரவாயில்லை என உணர்ச்சிகரமாக பேசியிருக்கிறார் விழுப்புரம் தெற்கு நகர அதிமுக செயலாளர் பசுபதி. ரத்தத்தின் ரத்தங்களின் குற்றச்சாட்டுகள் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் அதிமுக தலைமை சி.வி. சண்முகம் மீது நடவடிக்கை எடுக்குமா என ரத்தத்தில் ரத்தங்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்
- சிறப்பு நிருபர்
-
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்!












Click it and Unblock the Notifications