அரசியல் பிளாக் காமெடி.. 'வெறுப்பு' பற்றி நீங்க பாடம் நடத்தாதீங்க.. உ.பி. யோகிக்கு ஸ்டாலின் பதிலடி!
சென்னை: தமிழகம் எந்த ஒரு மொழிக்கும் எதிரானது அல்ல; தமிழகத்தின் மீது இந்தி மொழி திணிக்கப்படுவதைத்தான் எதிர்க்கிறோம் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் வெறுப்பை விதைத்து அரசியல் செய்வதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்ததற்கு “அரசியல் பிளாக் காமெடி” என பதிலடி தந்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

Tamil Nadu’s fair and firm voice on #TwoLanguagePolicy and #FairDelimitation is echoing nationwide—and the BJP is clearly rattled. Just watch their leaders’ interviews.
— M.K.Stalin (@mkstalin) March 27, 2025
And now Hon’ble Yogi Adityanath wants to lecture us on hate? Spare us. This isn’t irony—it’s political black… https://t.co/NzWD7ja4M8
முதல்வர் ஸ்டாலின் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாடு இரு மொழிக் கொள்கையை மிகவும் உறுதியாக பின்பற்றுகிறது. அதேபோல நியாயமான தொகுதி மறுசீரமைப்புதான் அவசியமானது என்கிற குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. இந்த விவகாரங்களில் பாஜகதான் மிகவும் பதற்றமாக இருக்கிறது என்பதை அதன் தலைவர்கள் தந்து கொண்டிருக்கும் நேர்காணல்களே வெளிப்படுத்துகின்றன.
"வெறுப்பு உணர்வு" பற்றி உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் நடத்த விரும்புகிறாரா? எவ்வளவு முரண்பாடாக இருக்கிறது. இது ஒரு பொலிட்டிக்கல் பிளாக் காமெடி. நாங்கள் எந்த ஒரு மொழியையும் எதிர்க்கவில்லை; நாங்கள் எதிர்ப்பது எல்லாம் மொழி திணிப்பையும் மேலாதிக்கத்தையும்தான். இது ஒன்றும் வாக்கு வங்கி அரசியலுக்கானதும் அல்ல. இது கண்ணியத்துக்கும் நீதிக்குமான யுத்தம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஏ.என்.ஐக்கு உபி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதம், மொழி அடிப்படையில் பிரிவினையை உருவாக்குகிறார். இந்தி மொழியை ஏன் வெறுக்க வேண்டும்? ஒவ்வொரு மொழியையும் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகள் கற்றுத்தரப்படுகின்றன. கன்னடம், மலையாளம் மொழிகளையும் கற்றுத்தருகிறோம். அத்துடன் வெளிநாட்டு மொழிகளையும் கற்றுத் தருகிறோம். தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இந்த மொழிகளை கற்றுத் தருகிறோம். உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிகளை கற்றுத் தரும்போது இந்தி மொழியை தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் ஏன் கற்றுத்தரக் கூடாது? என கூறியிருந்தார். இதற்குத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதளப் பக்கங்களில் பதிலடி தந்துள்ளார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications