உங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கிறோம்.. அதற்காக.. ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதில்
சென்னை: ஆளுநருக்கும் அவரது அலுவலகத்திற்கும் உரிய மரியாதை கொடுப்பதாக முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதிய 6 பக்க பதில் கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக ஆளுநர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளதாக நேற்று இரவு தகவல் வெளியானது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடனடியாக அறிவித்தார். அடுத்த சில மணிநேரங்களிலேயே தனது அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக ஆளுநரிடம் இருந்து அறிவிப்பு வெளியானது.

உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின் பேரில் அட்டார்னி ஜெனரலிடம் ஆலோசனை கேட்டு இருப்பதாகவும் அதுவரை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார். இதற்கிடையே, முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி 5 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், ஜூன் 16ஆம் தேதி செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதத்தில், வரம்பு கடந்த வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
நீங்கள் எழுதியுள்ள கடிதத்தில் செந்தில் பாலாஜி கைது குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை. இலாகாக்கள் மாற்றம் குறித்த தகவல் மட்டுமே இடம் பெற்றது. அந்த இலாகாக்கள் ஏன் மாற்றப்பட வேண்டும் என்ற முழுமையான தகவல்கள் இல்லை. எனக்கு எழுதிய கடிதங்களில் விரும்பத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளீர்கள். தகவல்களை மறைக்கும் விதமாக உங்களது செயல்பாடுகள் உள்ளது '' என பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக முதல்வர் மீது ஆளுநர் சுமத்தியிருந்தார்.
இந்த நிலையில், ஆளுநருக்கு பதில் அளித்து மு.க ஸ்டாலின் இன்று 6 பக்க கடிதம் எழுதினார். அதில் மு.க ஸ்டாலின் கூறியதாவது:- நான் வரம்பு கடந்த வார்த்தைகளை பயன்படுத்தியதாக என் மீது குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். தமிழக அரசு எப்போதுமே உங்களுக்கும், உங்கள் அலுவலகத்துக்கும் உள்ள மரியாதையை தந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழ் கலாசாரம் கற்றுக்கொடுத்த அந்த மரியாதையை நாங்கள் எப்போதுமே வழங்கிக்கொண்டிருக்கிறோம்.
அதனால் உங்களால் எங்களுக்கு அளிக்கப்படும் சட்டவிரோத உத்தரவுகளுக்கு நாங்கள் பணிவதாக நினைத்துவிடக்கூடாது. அமைச்சரவையில் யார் அமைச்சராக இருக்கவேண்டும்? யார் நீக்கப்படவேண்டும்? என்பதை முடிவு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அது முழுக்க, முழுக்க முதல்வரின் தனிப்பட்ட சிறப்பு உரிமையாக உள்ளது.
அரசியல் சாசனம் 164 (2)-ன்படி முதல்வரும் அமைச்சரவையும், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபைக்கு பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள். எனவே செந்தில் பாலாஜியையோ, எனது அமைச்சர்களையோ 'டிஸ்மிஸ்' செய்யவேண்டும் என்று உத்தரவிடுவதற்கு உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications