கோவை ஓகே.. மதுரைக்கு? வந்தே பாரத் ரயில் கட்டணத்தையும் குறைக்க வேண்டும்.. மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் ரயிலின் கட்டணம் மிக மிக அதிகமாக இருப்பது பயணிகளுக்கு சற்று அதிர்ச்சி கொடுப்பதாக உள்ளது. இதை கவனத்தில் கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் நேரடியாகவே வந்தே பாரத் ரயில் சேவைக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார். இதேபோல மதுரைக்கும் வந்தே பாரத் ரயில் சேவையை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை-மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திற்கு 2-வது வந்தே பாரத் ரயிலாக சென்னை - கோவை இடையேயான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். அதேபோல், மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை இடையிலான 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். இரவு 8.15 மணிக்கு இந்த ரயில் கோவை சென்றடையும். வாரத்திற்கு ஆறு நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும். புதன்கிழமை மட்டும் இந்த ரயில் சேவை இருக்காது. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் கட்டணம் அதிகமாக இருப்பது பயணிகளுக்கு சற்று அதிருப்தியை கொடுத்துள்ளது.

சென்னை கோவை வந்தே பாரத் ரயிலில் AC Executive Chair Car வகுப்பில் டிக்கெட் கட்டணம் ரூ.2,310 ஆகவும், AC Chair Car கட்டணம் ரூ.1,215 ஆக வசூலிக்கப்பட்டு உள்ளது. உணவின்றி டிக்கெட் கட்டணம் AC Executive Chair Car இருக்கைக்கு ரூ.2,116 ஆகவும், AC Chair Car இருக்கைக்கு ரூ.1,057 ஆகவும் வசூலிக்கப்படுகிறது. சென்னை- கோவை இடையே இயக்கபப்டும் பிற ரயில்களில் வசூலிக்கப்படும் நிலையில் அதை விட பல மடங்கு வசூலிப்பது பயணிகளுக்கு சற்று அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.
இதைக் கருத்தில் கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின், இன்று பல்லாவரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடியிடம் நேரடியாகவே இந்த கோரிக்கையை முன்வைத்தார். பயணிகளின் எண்ணத்தை பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அப்படியே வெளிப்படுத்தியதை பிரதமரும் கேட்டுக்கொண்டு இருந்தார். இதனால், முதல்வரின் இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு வந்தே பாரத் ரயிலின் கட்டணம் குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications