ஒரு ஏரியா விடக்கூடாது! சென்னையில் களமிறங்கிய நரிக்குறவர்! நாய்களை பிடிக்க மாநகராட்சி நடவடிக்கை
சென்னை: சென்னையில் நாய்க்கடி கட்டுப்பாட்டை மேற்கொள்ள மாநகராட்சி களமிறங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் நரிக்குறவர்கள் களமிறங்கப்பட்டுள்ள சம்பவம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் தெருநாய்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணியை சென்னை மாநகராட்சி கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. இதற்காக சென்னை மாநகராட்சி கையில் எடுத்துள்ள முறை ஒன்றுதான் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

தெருநாய்கள் கணக்கெடுப்பு மற்றும் எக்டோ மற்றும் எண்டோபராசைட்டுகளுக்கு எதிரான ஐவர்மெக்டின் தடுப்பூசி போடுதல், ரேபீஸ் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இந்த பணிகள் ராயபுரம் கோட்டத்தில் (மண்டலம் 5) கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) கமிஷனர் ஜே ராதாகிருஷ்ணன் மூலம் தொடங்கப்பட்டது.
சென்னை தெருநாய்கள்: நகரத்தில் உள்ள 16 மண்டலங்களில் சுமார் 120 நாட்களுக்கு இந்த இயக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், விருப்பமுள்ள தன்னார்வலர்களை பயிற்சியில் சேர அழைப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெறிநாய்க்கடியில் இருந்து சென்னையில் வசிக்கும் மக்களை காப்பாற்றவும், சென்னையை வெறிநாய்க்கடியில் இருந்து விடுவிக்கவும், உலக சுகாதார நிறுவனம் வழங்கிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில், சுகாதார துறை மற்றும் கால்நடை துறைகளுடன் இணைந்து சென்னை மாநகராட்சி பணிகளை செய்து வருகிறது.
என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள்: அக்டோபர் 2018 கணக்கெடுப்பின்படி, சென்னையில் 57,366 நாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு கால்நடை மருத்துவர், நான்கு நாய் பிடிப்பவர்கள், இரண்டு உதவியாளர்கள் மற்றும் ஒரு வாகனம் அடங்கிய ஏழு பிரத்யேக குழுக்களை GCC நியமித்துள்ளது, இது ஒவ்வொரு நாளும் தோராயமாக 910 தெரு நாய்களைப் பிடித்து தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தடுப்பூசிகள் மற்றும் ஒட்டுண்ணிக்கொல்லிகள் வழங்கப்பட்ட பிறகு நாய்கள் எடுக்கப்படும் அதே பகுதியில் விடப்படும். சிகிச்சையளிக்கப்பட்ட நாய்கள் அடையாளம் காண அதன் மீது டை ஒன்று அடிக்கப்படும், என்று GCC குறிப்பிட்டது.
தெருநாய்களின் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகுதான் நகரத்தில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கை தெரியவரும் என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் நாய்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர், சென்னையின் எண்ணிக்கை 93,000 ஐத் தாண்டும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நரிக்குறவர்கள்: சென்னையில் நாய்க்கடி கட்டுப்பாட்டை மேற்கொள்ள மாநகராட்சி களமிறங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் நரிக்குறவர்கள் களமிறங்கப்பட்டுள்ள சம்பவம் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
நாய்கள் பிடிப்பவர்களான நரிகுறவர் பழங்குடியினரை நாய்கள் கணக்கெடுப்பு பணிக்கு சென்னை மாநகராட்சி அமர்த்தியுள்ளது. பல்லாவரம் அருகே உள்ள நரிக்குறவர் காலனியில் 28 தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு சென்னை மாநகராட்சி மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.500 ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்கள்தான் நாய்களை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், நாய்கள் அருகே இருக்கிறதா என்பதை நாங்கள் முகர்ந்து பார்த்து வாசனை மூலமே கண்டுபிடிப்போம். அதனால் எங்களை பணிக்கு அழைத்துள்ளனர் என்று நரிக்குறவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராயபுரம் நாய்க்கடி சம்பவம்: ராயபுரம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 5 குழந்தைகள் உட்பட 29 பேரை வெறிநாய் கடித்தது. காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு வெறிநாய் தடுப்பு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்கே மக்களை கடித்த நாயை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். பிரேதப் பரிசோதனையில் அந்த நாய்க்கு ரேபீஸ் வெறிநாய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதை தொடர்ந்து, ராயபுரம் பகுதியில் உள்ள நாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான தடுப்பூசி இயக்கத்தை செயல்படுத்தவும், ரேபிஸ் அறிகுறிகளைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதை தொடர்ந்தே ரேபீஸ் கட்டுப்பாடு நடைமுறை தற்போது கையில் எடுக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications