அதிமுக அவைத்தலைவரின் சட்டவிரோதமான செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டோம்.. பண்ருட்டி ராமச்சந்திரன்
அதிமுக அவைத்தலைவரின் சட்ட விரோதமான செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டோம் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியுள்ளார்.
சென்னை: அதிமுக அவைத்தலைவரின் சட்ட விரோதமான செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டோம் என்றும் அதிமுக வேட்பாளர் தேர்வு குறித்த நீதிமன்றத்தின் உத்தரவை தமிழ்மகன் உசேன் பின்பற்றவில்லை என்றும் அதிமுகவின் ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியுள்ளார்.

அதிமுகவின் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:-
உச்ச நீதிமன்றம் வேட்பாளாரை தேர்வு செய்வதற்கு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற பட்டியல் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்பாக வைக்கப்பட்ட்டு அவர்களுடைய வாக்குகளை பெற வேண்டும் அதைத்தான் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.ஆனால், தமிழ் மகேன் உசேன் செய்து இருப்பது பொது வாக்கெடுப்பு.. அவர் ஒரு வேட்பாளரை அறிவிக்கிறார். ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா? என்று கேட்கிறார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற முழு பட்டியலை பெற்று அதை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி அவர்கள் வாக்குகளை பெறுவதற்கு பதிலாக இவரே ஒரு வேட்பாளரை அறிவித்து யார் யார் ஆதரிக்கிறீர்கள் யார் யார் எதிர்க்கிறீர்கள் என்று கேட்பது பொது வாக்கெடுப்பு. ஆகவே முழுக்க முழுக்க உச்ச நீதிமன்ர தீர்ப்புக்கு முரணான செயலில் ஈடுபட்டு இருக்கிரார். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications