சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மழை முடியட்டும்...விசாரணைக் கமிஷன் அமைத்து குற்றவாளிகளை தண்டிப்போம் - மு.க ஸ்டாலின் எச்சரிக்கை

எதிர்கட்சியினர் செய்த அக்கிரமத்தை அநியாயத்தை மழை முடிந்த பிறகு அதற்கென்று ஒரு கமிஷன் வைத்து, எங்கெங்கு தவறு நடந்திருக்கிறது என்பதை அறிந்து நிச்சயமாக யார் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெ

Google Oneindia Tamil News

சென்னை: மழை வெள்ள மீட்பு நடவடிக்கைகள் முடிந்த பின்னர் எதிர்கட்சியினர் செய்த ஊழலை விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். எங்கெங்கு தவறு நடந்திருக்கிறது என்பதை அறிந்து தண்டிக்கப்படுவார்கள் என்றும் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. சென்னையில் பெருவெள்ளம் சூழ்ந்த நிலையில் கன்னியாகுமரியில் கனமழை பெய்து எங்கெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கன்னியாகுமரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மழை வெள்ள பாதிப்புளை ஆய்வு செய்ய நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் குமரி செல்கிறார்.

 Orange Alert: கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..! Orange Alert: கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மைலப்பா தெரு , நேரு மண்டபம் பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் துவங்கி வைத்து மழை நீரினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அத்துடன் மழை நீரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் தேவைகளை கேட்டறிந்தார்.

சிறப்பு மருத்துவ முகாம்

சிறப்பு மருத்துவ முகாம்

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லாக்மா நகரில் தடுப்பூசி மற்றும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டதுடன் , மாதவரம் நெடுஞ்சாலை கமலாம்பாள் திருமண மண்டபத்தில் சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு சத்து மருந்துகளை வழங்கினார்.

வெள்ள நிவாரண நிதி

வெள்ள நிவாரண நிதி

டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையிலான குழு ஆய்வு செய்து இன்று அல்லது நாளை அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் ; அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ள சேதம் குறித்து பிரதமரை சந்தித்து நிதி கோரிக்கை வைக்க உள்ளோம். கன்னியாகுமரிக்கு நாளை வெள்ள பாதிப்பை பார்வையிட செல்வதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

ஓட்டுப்போடாதவர்களுக்கு சேவை

ஓட்டுப்போடாதவர்களுக்கு சேவை

என்னுடைய வேலை மக்களுக்காக பணியாற்றுவது தான். மக்கள் எனக்கு பெரிய வெற்றியை கொடுத்தார்கள். இன்றைக்கும் சொல்கிறேன் ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் ஓட்டு போடாத மக்களுக்கும் சேர்த்து தான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இதுதான் என்னுடைய கொள்கை என்றார்.

குற்றவாளிகளுக்கு தண்டனை

குற்றவாளிகளுக்கு தண்டனை

எதிர்க்கட்சி எந்த புகார் செய்தாலும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எதிர்கட்சியினர் செய்த அக்கிரமத்தை அநியாயத்தை மழை முடிந்த பிறகு அதற்கென்று ஒரு கமிஷன் வைத்து, எங்கெங்கு தவறு நடந்திருக்கிறது என்பதை அறிந்து நிச்சயமாக யார் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடந்த ஆட்சியில் ஊழல்

கடந்த ஆட்சியில் ஊழல்

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஸ்மார்ட் சிடி திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின், சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட முந்தைய ஆட்சியே காரணம் என்று குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசுக்கு மழை வெள்ள காலங்களில் நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்ள தெரியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இதன்காரணமாகவே ஊழல் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

English summary
MK Stalin has said that a commission of inquiry will be set up to look into corruption by the opposition after the completion of the flood relief operations. MK Stalin also said that they would be punished if they knew where the mistake had been made.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X