பாஜகவை தோற்கடிக்க ஒருங்கிணைந்து செயல்படுவோம்.. ஸ்டாலினை சந்தித்த பின் சீதாராம் யெச்சூரி பேட்டி
சென்னை: பாரதிய ஜனதாவை தோற்கடிக்க தேசிய அளவில் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறார். எதிர்க்கட்சிகளின் தலைவர்களை தொடர்ச்சியாக சந்தித்து வரும் நிதிஷ் குமார் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த நிலையில், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் இன்று முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த பிறகு இது குறித்து பேசியிருக்கிறார். விழுப்புரத்தில் இன்று நடைபெறும் பட்டியலின, பழங்குடியின மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீதாராம் யெச்சூரி இன்று சென்னை வந்தார்.

அண்ணா அறிவாலயம் சென்ற சீதாராம் யெச்சூரி முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீதாராம் யெச்சூரி, " தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் பற்றி மு.க ஸ்டாலினுடன் பேசினேன்.

தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி விரைவில் மாநாடு நடத்தப்படும். இந்திய அரசு அமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க மாநில அளவில் பாஜகவை ஆட்சியில் அமரவிடாமல் தோற்கடிக்க வேண்டும் .இதற்காக ஒருங்கிணைந்து செயல்பட தயராக இருக்கும் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து செயல்படுவோம்" என்றார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா












Click it and Unblock the Notifications