மாறுது வானிலை.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய வார்த்தையை கவனிச்சீங்களா.. அடடே சென்னை
சென்னை: கடந்த சில நாட்களாக சென்னையில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவாகியிருந்த நிலையில், இன்று முதல் இந்த வெப்ப அலை முடிவுக்கு வரும் என வானிலை ஆய்வாளர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ம் தேதி அக்னி வெயில் தொடங்கியது. ஆனால் இந்த வெயில் தொடங்குவதற்கு முன்னரே மாநிலம் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி எடுக்க தொடங்கிவிட்டது. பல மாவட்டங்களில் வெயில் சதமடிக்க தொடங்கிவிட்டது. இதனையடுத்து, அக்னி நட்சத்திரம் தொடங்கியது. வழக்கம்போல வெயிலும் வாட்டியது. அன்றாடம், பணிக்கு செல்வோர், கூலி தொழிலாளிகள், தள்ளு வண்டி வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அக்னி கடந்த 26ம் தேதி முடிவடைந்தது. இருப்பினும் வேலூர் மட்டுமல்லாது சென்னை, மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது. சென்னையை பொறுத்த அளவில் வெயில் 104 டிகிரி எனும் அளவுக்கு வீசி வந்தது, உடன் அனல் காற்றும் வீசியது. இந்த வெயில் தாக்கம் காரணமாக எனவே நேற்று திறக்கப்பட இருந்த பள்ளிகள் 14ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.

இந்நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு வெப்பம்+அனல் காற்று இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. தற்போது இரண்டு நாட்கள் முடிவடைந்ததால் இன்று முதல் சென்னையில் வெப்பம் தணியும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளார். இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், "ஜூன் 9ம் தேதியான இன்று முதல் சென்னையில் அதீத வெப்பம் குறையும். சென்னை மட்டுமல்லாது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வெப்பம் குறையும்.
மேலும் சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். நகர் பகுதியை பொறுத்த அளவில் ஜூன் 10ம் தேதியான நாளை மழை பெய்யும்" என கூறியுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக சென்னையின் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications