இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை.. 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்! எங்கெல்லாம் தெரியுமா? -ரிப்போர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும், 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே டிரைலர் போல தொடர்ந்து 4 நாட்கள் விட்டு விட்டு மழை பெய்தது.
அதேபோல் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக காவிரியில் வெள்ளம் ஏற்பட்டது.

மழை
மேட்டூர் அணை நிரம்பி, காவிரியில் வந்த நீர் மொத்தமாக அப்படியே வெளியேற்றும் அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டது. தமிழ்நாடு முழுக்க பெரும்பாலான நீர் நிலைகள் இந்த மழை காரணமாக நிரம்பி உள்ளன. இந்த நிலையில்தான் தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சனிக்கிழமை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதேபோல் வட இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.

இன்று
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இன்று அதிகாலையில் இருந்தே இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

கனமழை
சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது. அடுத்த 2-3 மணி நேரங்களுக்கு பின்பாக இங்கு கனமழை பெய்ய தொடங்கும். மாலை வரை மழை நீடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. பின்னர் இரவிற்கு பின் மீண்டும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

நாளை நிலவரம்
நாளையும் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும். நாளை 15 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் மழை பெய்யும். கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,, ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மறுநாள் மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

4ம் தேதி
அதேபோல் 4ம் தேதி புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும். இன்று சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 24- 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications