அந்த 10 நிமிடம் நடந்தது என்ன? சென்னையில் காலையில் புரட்டிய மழை.. அடுத்த 3 மணி நேரம் ரொம்ப முக்கியம்!
சென்னை: சென்னையில் இன்று அதிகாலையில் கனமழை புரட்டி எடுத்தது. பல்வேறு பகுதிகளில் எதிர்பார்த்ததை விட மிக தீவிர கனமழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த வாரம் சென்னையில் கனமழை பெய்தது. அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்தது.
இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த மாற்றம் இணைந்து தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இலங்கைக்கு வடமேற்கு பகுதியில் இந்த தாழ்வு பகுதி உள்ளது.

தாழ்வு பகுதி
கடந்த 24 மணி நேரத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமாக இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து உள்ளது. இதனால் இன்று தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. அதேபோல் தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 20 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கனமழை
தி.மலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, வேலூர், திருப்பத்தூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் உள்பட 20 மாவட்டங்களில் அடுத்த 3மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. சென்னையில் அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நள்ளிரவில் தொடங்கிய மழை அதிகாலை வரை விடாமல் பெய்து வருகிறது.

கனமழை
தற்போது ஒரு சில இடங்களில் மட்டும் மழை விட்டுள்ளது. மற்ற பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி பகுதிகளில் அதிகாலையில் கனமழை பெய்தது. வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை பகுதிகளில் 2 மணி நேரமாக மழை பெய்தது மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளது விடாமல் பெய்யும் மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

அந்த 10 நிமிடம்
அதிலும் அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 6.30 முதல் 6.40 வரை மிக அதிக அளவில் விடாமல் மழை பெய்தது. இந்த சுற்றுவட்டார பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் 10 நிமிடத்தில் 50 மிமீ மழை வரை பெய்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி வேகமாக வலுவடைந்து வருவதால் மழையும் அதிகரித்து வருகிறது. இலங்கைக்கு வடமேற்கு பகுதியில் இருப்பதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு மிக அதிக அளவில் மழை பெய்கிறது. நேற்று இரவு முழுக்க திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களிலும் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications