அடுத்த இன்னிங்க்ஸ் இருக்கு.. தமிழ்நாட்டில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை- சென்னையில் பெய்யுமா?
சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Recommended Video
10 மணி நேரமாக சென்னையில் விடாமல் பெய்து வந்த கனமழை காரணமாக மொத்த நகரும் ஸ்தம்பித்து போய் உள்ளது. சென்னை முழுக்க பல்வேறு பகுதிகளில் 200 மிமீக்கும் அதிகமாக மழை பெய்து அதிர்ச்சி அளித்து உள்ளது.
மைலாப்பூர், எம்ஆர்சி நகர், மெரினா சாலை, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் எல்லாம் 200 மிமீ மழையை தாண்டிவிட்டது. அதேபோல் ஆழ்வார்பேட்டை, மீனம்பாக்கம், வளசரவாக்கம், ஈசிஆர் சாலை முழுக்க மழை அளவு 100 மிமீ அளவை தாண்டிவிட்டது.

இன்றும் மழை
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது கிழக்கு காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இது எதிர்பார்க்காத மிக அதிக மழையை தமிழ்நாட்டிற்கு அளித்து வருகிறது.

மழை அளவு
முதலில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை கடலோர மாவட்டங்களில் ஆங்கங்கே பெய்யும் என்று கருதப்பட்டது. ஆனால் கணிப்புகளை மீறி நேற்று சென்னையில் 10 மணி நேரம் கனமழை வெளுத்து எடுத்து. பல இடங்களில் 200 செமீ மழை வெளுத்து வாங்கியது.

தமிழ்நாடு மழை
இந்த நிலையில் இன்று கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களின் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே மழை பெய்து வருகிறது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில் அதிகாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது.

சென்னை
இன்று கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நகரின் சில பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்கள்
அதேபோல் இன்று கடலோர மாவட்டங்களில் காற்று வேகமாக வீசும். இதனால் கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். காற்றின் வேகம் 45 கிமீ வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த 3 மணி நேரம்
இன்று காலை 10 மணி வரை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர் ஆகிய 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications