சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Weather Report: கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க.. சென்னை ரெய்ன்ஸ் சொன்ன குட் நியூஸ்- இனி என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

சென்னை; சென்னையில் இப்போதைக்கு மழை மொத்தமாக விடவில்லை என்றாலும் சென்னை மக்கள் கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம் என்று சென்னை ரெய்ன்ஸ் தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகளை தொடர்ந்து தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மிக தீவிரமாக கனமழை பெய்து வருகிறது.

இலங்கை: ராணுவத்தின் மிக மோசமான சுற்றிவளைப்புக்கு நடுவே நடத்தப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்இலங்கை: ராணுவத்தின் மிக மோசமான சுற்றிவளைப்புக்கு நடுவே நடத்தப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்

வங்கக்கடலை ஒட்டி இருக்கும் கடலோர மாவட்டங்கள் முழுக்க கனமழை பெய்து வருகிறது. சென்னை தொடங்கி குமரி வரை கடலோர மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை சென்னையில் தீவிரம் எடுத்த மழை இதுவரை விடவில்லை.

சென்னை ரெய்ன்ஸ்

சென்னை ரெய்ன்ஸ்

வடதமிழ்நாட்டில் நேற்றும் இன்றும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது போலவே தற்போது மழை பெய்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் சென்னையில் இப்போதைக்கு மழை மொத்தமாக விடவில்லை என்றாலும் சென்னை மக்கள் கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம் என்று சென்னை ரெய்ன்ஸ் தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Chennairains பக்கம் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில் சென்னையில் நேற்று மழை கொஞ்சம் குறைவாக இருந்தது.

டெல்டா

டெல்டா

சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரத்தில், டெல்டாவில் சில பகுதிகளிலும் சனிக்கிழமை ஒப்பீட்டளவில் முந்தைய நாட்களை விட மழை குறைவாகவே இருந்தது. கணித்ததுபடியே காற்று சென்னை பக்கம் திரும்பி அதனால் மழை ஏற்பட்டு இருந்தாலும் சென்னையிலும் மழை நேற்று மிதமாகவே இருந்தது. சென்னையில் இருக்கும் நீர் வடிய இன்னும் 2 நாட்களாவது எடுக்கும்.

அதிகாலை

அதிகாலை

இன்று அதிகாலை நேரத்தில் சென்னையில் மிதமான மழை பெய்தது. அதேபோல் செங்கல்பட்டில் மிதமான மழை பெய்தது. சென்னையில் மழை முடிந்துவிட்டது என்று சொல்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை. ஆனால் மக்கள் கொஞ்சம் மூச்சுவிட்டுக்கொள்ளலாம். ஏனென்றால் இப்போது இருக்கும் மழை இன்னும் தீவிரம் அடைய வாய்ப்பு இல்லை. தென் சீனாவின் கடல் பகுதியில் இருந்து மேடன்-ஜூலியன் அலைவு வரிசைகளை வங்கக்கடலுக்கு வெப்பமண்டல ஒருங்கிணைப்பு மண்டலம் அனுப்பி வருகிறது.

வித்தியாசம்

வித்தியாசம்

இதனால் அடுத்த 48 மணி நேரம் கடந்த 2 நாட்களை விட வித்தியாசமாக இருக்கும். இடியுடன் கூடிய மழை அளவை இது குறைக்கும். இருப்பினும் நாளை அல்லது அடுத்த இரண்டு நாட்களுக்கு இதன் காரணமாக தென் தமிழ்நாடு கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் பகுதிகளிலும் இதனால் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளது. இப்போது கொமொரின் கடல் மற்றும் இலங்கையை கடக்கும் பலவீனமான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழைக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும்.

Recommended Video

    மீண்டும் வெள்ளக்காடான முதல்வர் தொகுதி: மழை நீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!
    மேற்கு தொடர்ச்சி மழை

    மேற்கு தொடர்ச்சி மழை

    இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் ஒன்று இரண்டு பகுதிகளில் மிக மிக கனமழை பெய்யும் வாய்ப்புகளும் உள்ளன. சென்னையை பொறுத்தவரை இன்று மிதமான மழை பெய்யும். சில நேரங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புகளும் உள்ளன. முக்கியமாக இரவிலும், அதிகாலையிலும் கனமழை பெய்யும். ஆனால் மொத்தத்தில் பார்த்தால் வரும் நாட்களில் மழை படிப்படியாக குறையும். ஆனால் மொத்தமாக மழை நிற்கும் என்று கூற முடியும். இதனால் நாம் இப்போது கிழக்கு பகுதியில் ஏதேனும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக என்று கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சென்னை ரெய்ன்ஸ் தங்கள் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. Credit: https://www.chennairains.com/

    English summary
    Weather Report: Its time for some breath says Chennai Rains on rain in north Tamilnadu parts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X