குட்நியூஸ்! 1 வாரத்திற்கு முன்பாக.. இன்றே அந்தமானில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை! வானிலை ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெற்கு அந்தமான் கடலில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்குவதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பாகவே தெற்கு அந்தமான் கடலில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.

தெற்கு அந்தமான் கடல், நிக்கோபார் தீவுகள், தென்கிழக்கு வங்கக்கடலில் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது. இந்த பகுதியில் வரும் நாட்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இங்கு 64.5 மிமீ to 115.4 மிமீ வரையிலான தீவிர மழை வரும் நாட்களில் பெய்யலாம்.

5 நாட்கள் மழை

5 நாட்கள் மழை

அடுத்த 5 நாட்களுக்கு இந்த பகுதியில் தீவிர கனமழை பெய்யும். கேரளா, தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரண்டு மாநிலங்களும் ஹை அலர்ட்டில் இருக்க வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. கடலோர கர்நாடக மாவட்டங்களிலும் தீவிர கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முன்பே தொடங்குகிறது

முன்பே தொடங்குகிறது

ஒரு வாரத்திற்கு முன்பாகவே தெற்கு அந்தமான் கடலில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை. அசானி புயல், கரீம் புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக பருவமழைக்கு இரண்டு - மூன்று வாரங்களுக்கு முன் தாக்கும் புயல் பருவமழையை துரிதப்படுத்தும் என்பார்கள். அப்படிதான் இந்த முறை பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளது.

எப்போது வரும்

எப்போது வரும்

அந்தமானில் 22ம் தேதிதான் பருவமழை தொடங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை 15ம் தேதியே தொடங்குகிறது. அதேபோல் வழக்கமாக ஜூன் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும். இப்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தால் கேரளாவிலும் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.

 இன்றைய வானிலை

இன்றைய வானிலை

இது போக இன்று தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+