சென்னைக்கு 'கூல்' நியூஸ் சொன்ன வெதர்மேன்.. அதைவிடுங்க.. இன்னும் 48 மணிநேரம்தான்.. இதை நோட் பண்ணுங்க
சென்னை: சென்னைக்கு குட் நியூஸ் தகவலை வெதர்மேன் தெரிவித்துள்ள அதேசமயம், இந்திய வானிலை மையமும் மற்றொரு தகவலை தெரிவித்துள்ளது.. அந்த இரட்டிப்பு செய்திகள் இதுதான்.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ம் தேதி அக்னி வெயில் தொடங்கியது. ஆனால் இந்த வெயில் தொடங்குவதற்கு முன்னரே மாநிலம் முழுவதும் கடுமையான வெயில் வாட்டி எடுக்க தொடங்கிவிட்டது. பல மாவட்டங்களில் வெயில் சதமடிக்க தொடங்கிவிட்டது. இதனையடுத்து, அக்னி நட்சத்திரம் தொடங்கியது. வழக்கம்போல வெயிலும் வாட்டியது. அன்றாடம், பணிக்கு செல்வோர், கூலி தொழிலாளிகள், தள்ளு வண்டி வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த வெயிலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அக்னி கடந்த 26ம் தேதி முடிவடைந்தது. இருப்பினும் வேலூர் மட்டுமல்லாது சென்னை, மதுரை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது. சென்னையை பொறுத்த அளவில் வெயில் 104 டிகிரி எனும் அளவுக்கு வீசி வந்தது, உடன் அனல் காற்றும் வீசியது. இந்த வெயில் தாக்கம் காரணமாக எனவே நேற்று திறக்கப்பட இருந்த பள்ளிகள் 14ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
இந்நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு வெப்பம்+அனல் காற்று இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், "தற்போதைய இந்த அதீத வெப்ப நிலைக்கு வறண்ட மேற்கு திசை காற்றுதான் காரணம். பொதுவாக மே மாதம் முடிந்துவிட்டால் வெப்பம் குறைந்துவிடும் என பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது ஜூன் மாதம் வரை நீடிக்கும். கடந்த ஆண்டுகளில் இதுபோன்று அதீத வெப்பம் இதே மாத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு, ஜூன் மாத்தின் 14 நாட்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 104 டிகிரியை தொட்டிருந்தது. எனவே இந்த வெப்பநிலை குறித்து கவலையடையாமல் இதிலிருந்து தற்காக்கும் வழிகளை பின்பற்ற வேண்டும். இன்றும் இரண்டு நாட்களுக்கு இதே அளவு வெயில் நீடிக்கும். பின்னர் காற்றின் திசை மாறுபாடு காரணமாக வெப்பநிலை குறைய வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் இன்று மாலை அல்லது இரவு லேசான மழை பெய்யும் என்றும் இதன் காரணமாக வெப்பம் தணியும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். சென்னை மட்டுமல்லாது, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளார்.

ஏற்கெனவே அரபிக்கடலில் உருவாகியுள்ள பைபர்ஜாய் புயல் காரணமாக கேரளாவில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களிலும் மழை இருக்கும் என ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்த நிலையில், தற்போது வட மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னொரு தகவலை தெரிவித்துள்ளது.. அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் நேற்றிரவு 11.30 மணி நிலவரப்படி, கோவாவிற்கு மேற்கு மற்றும் தென்மேற்கே சுமார் 870 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மும்பைக்கு தென்மேற்கே 930 கி.மீட்டர் தொலைவிலுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் படிப்படியாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசையில் அடுத்த தினங்களில் நகரும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
-
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications