அண்ணாநகரில் குத்த வச்ச கல்லான மேக கூட்டம்.. குறைந்த நேரத்தில் 100 மி.மீ. மழை.. வெதர்மேன் ஹேப்பி
சென்னை: சென்னை அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 100 மி.மீ. மழை பெய்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தற்போது தென்மேற்கு பருவமழை காலம் என்கிற போதிலும், ஏதோ இயற்கை நம் மீது கரிசனம் காட்டி சென்னைக்கு மழையை தருகிறது. அதன் காரணமாக சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனம்பாக்கத்தில் வெளுத்தது மழை. குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் அங்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
உங்களாலே ரொம்பவே பெருமையா இருக்கு... நாங்கள் உங்களை ரொம்பவே விரும்பறோம்.. பிரியங்கா

பாடி
அது போல் நேற்றைய தினம் யாரும் எதிர்பாராத நிலையில் நள்ளிரவு நேரத்தில் சென்னையில் கனமழை பெய்தது. பலத்த காற்று இருந்தது. ஆனால் இடி, மின்னல் இல்லாமல் இந்த மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ச்சி அடைந்தது. அண்ணாநகர், முகப்பேர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

பாடி, அண்ணாநகர்
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில், அண்ணா நகர், பாடி, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு குறைவான நேரத்தில் 100 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது. இந்த பகுதிகளில் மேகக் கூட்டங்கள் குத்த வச்ச கல்லு போல் நகராமல் இருந்தன.

சரிசமம்
இதனால் அதிக அடர்த்தி கொண்ட மழையை கொடுத்தது. கடந்த வாரம் தென் சென்னையில் எங்கெல்லாம் மழை பெய்ததோ அங்கெல்லாம் இந்த முறை பெய்யவில்லை. இந்த இயற்கையான மழை சரிசமமாக பெய்துள்ளது ஆச்சரியமளிக்கிறது. நுங்கம்பாக்கத்தில் மீண்டும் மழை பெய்யவில்லை.
Recommended Video

வடக்கு பகுதி
கடந்த முறையும் நுங்கம்பாக்கத்தில் மழை பெய்யாமல் சபிக்கப்பட்ட பகுதியாக இருந்த நிலையில் இந்த முறையும் மழையை தவறவிட்டுள்ளது. இது சஹாரா பாலைவனம் ஆனதுதான் காரணம். ஆனால் நுங்கம்பாக்கத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மழை பெய்யும். இந்த மழை எதிர்பாராத ஒன்று. இடி மின்னல் இல்லாமல் சும்மா பெய்து தீர்த்தது. சென்னையின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications