விட்டாச்சு லீவு.. தமிழ்நாடு முழுவதும் இன்று 600 ஸ்பெஷல் பஸ்கள்.. எங்கிருந்து எவ்வளவு?
சென்னை: வார இறுதி நாட்கள் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து 300 பேருந்துகளும் கோவை ,நெல்லை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து 300 பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் கோவில் திருவிழாக்கள், பண்டிகை நாட்களில்தான் சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று வந்தனர். தற்போது வாரந்தோறும் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரண்டு அல்லது 3 நாட்கள் விடுமுறை விட்டாலே சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஐடி நிறுவனங்கள், அரசு நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுவதால் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வார இறுதி நாட்களையொட்டி சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 600 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதம் என்பதால் பல ஊர்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. எனவே சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு இன்று மாலை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஞாயிறு மாலை சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
-
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications