Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞர் பலி! பம்மல் தனியார் மருத்துவமனையில் உரிமம் ரத்து செல்லாது! ஹைகோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பம்மலில் எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது செல்லாது என ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

புதுவையைச் சேர்ந்தவர் ஹேமசந்திரன். இவர் உடல் பருமன் காரணமாக சென்னை பல்லாவரம் அருகே உள்ள பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.

Weight loss treatment pondicherry youth died Chennai HC gives crucial judgement

அங்கு அவருக்கு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் கொழுப்புகளை நீக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அடுத்த 15 நிமிடங்களில் ஹேமசந்திரன் இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உடல் ஆரோக்கியத்துடன் இருந்த ஹேமசந்திரன், தவறான சிகிச்சை காரணமாக இறந்துவிட்டார் என்றும் மயக்க மருந்தை அதிக அளவில் கொடுத்ததால் இறந்திருக்கலாம் என்றும் மருத்துவர் மீதும் மருத்துவமனை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறந்த ஹேமசந்திரனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புதுவை ஹேமசந்திரன் இறப்பு தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை தமிழக மருத்துவத் துறை அமைத்தது. அந்த விசாரணை குழுவினர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில் கொழுப்பு நீக்க சிகிச்சையின் போது புதுவை இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை களைந்து சுகாதாரத் துறையை நாடினால், மீண்டும் ஆய்வு செய்து மருத்துவமனையை திறக்க அனுமதி வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மருத்துவமனையில் போதிய உயிர் காக்கும் சிகிச்சைக்கான வசதிகள் இல்லை என்றும் போதிய மருத்துவ நிபுணர்கள் இல்லை என்பது உறுதியான நிலையில் மருத்துவமனை மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் மருத்துவமனையின் உரிம ரத்தை எதிர்த்து மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் இளைஞர் ஹேமசந்திரன் உயிரிழந்த மருத்துவமனையின் உரிமம் ரத்து செல்லாது.

மருத்துவமனையிடம் உரிய விளக்கம் கேட்காமல் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நோயாளியிடம் முன் அனுமதி பெற்ற பிறகே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் கார்பரேட்டுகளாக மாறிய நிலையில் குறைந்த அளவிலான கட்டணத்தை வசூலிக்கும் மருத்துவமனைகளை அங்கீகரிக்க வேண்டும் என்றும் சுவாமிநாதன் தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் அறிவுரையின்படி, மருத்துவ ஆய்வுக் குழுவானது மே 3 அன்று பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டது.

இதில் நோயாளியின் பெற்றோரிடம் அறுவை சிகிச்சைக்கு முன் முறையாக ஒப்புதல் படிவம் பெறப்படவில்லை என்பதும், தகுதியில்லா செவிலியர்களைக் கொண்டு அறுவை சிகிச்சை அரங்கில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதும் தெரிய வந்துள்ளது. மேலும், அறுவை சிகிச்சையின் போது ICU மருத்துவர்கள், General Physician, Cardiologist பணியில் இல்லாததும், உயர்தர மருத்துவ உபகரணங்கள் (ECMO) இல்லாததும் மற்றும் நோயாளியைக் காலதாமதமாக மாற்றப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+