Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகம் வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி! முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்! பின்னணி?

Subscribe to Oneindia Tamil

சென்னை : வருகிற நவம்பர் 2ஆம் தேதி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தமிழகம் வரவுள்ள நிலையில், அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தேசிய அளவில் இந்த சந்திப்பு கவனிப்பை பெற்றுள்ளது.

மேற்குவங்க முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி தொடர்ந்து பாஜக தலைமையுடன் கடுமையான மோதல் போக்கை கையாண்டு வருகிறார். பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்கும் தலைவர்களை மிக முக்கியமானவராகவும் அவர் விளங்குகிறார்.

குறிப்பாக மத்திய பாஜக அரசால் மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்ட கெகதீப் தன்கருக்கும் இடையே வெளிப்படையாகவே கடும் மோதல் ஏற்பட்டது. இதற்கிடையில் குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலும் வந்தது.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

பாஜகவுக்கு எதிராக இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை திரட்டி தேர்தலில் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க காத்திருந்தார் மம்தா பானர்ஜி. ஆனால் பல கட்சிகள் கடைசி நேரத்தில் கழன்று கொண்டதால் அது கைகூடாமல் போனது. மேலும் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோர் தங்களை முன்னிலை படுத்திக் கொள்ள விரும்பியதால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் மம்தா உடன் கைகோர்க்க விரும்பாத நிலையில் இந்த கூட்டணி சாத்தியப்படவில்லை.

மெகா கூட்டணி

மெகா கூட்டணி

இதைஅடுத்து பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் குடியரசுத் தலைவராக பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவும் துணை குடியரசுத் தலைவராக மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கரும் பதவியேற்று கொண்டனர் . இதனால் பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி தோல்வியை சந்தித்தது. இதை அடுத்து மேற்குவங்க மாநில அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வந்த மம்தா அதற்குப் பிறகு பெரிய தலைவர்கள் யாரையும் சந்தித்து பேசவில்லை.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலினை மம்தா பானர்ஜி இன்னும் இரு நாட்களில் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது மேற்குவங்க ஆளுநராக இருக்கும் இல.கணேசன் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் மம்தா பானர்ஜி முதல்வர் முக ஸ்டாலினின் முகாம் அலுவலகத்தில் அவரை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மேற்குவங்கம் சென்ற போது முதல்வர் ஸ்டாலின் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசிய நிலையில் அது இந்திய அளவில் பேசப்பட்டது.

தேசிய முக்கியத்துவம்

தேசிய முக்கியத்துவம்

இதனிடைய மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது எனக் கூறப்பட்டாலும் தேசிய அளவிலான அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவினை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. இதனால் 3வது அணி குறித்த யூகங்களும் பரவி வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+