முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டிய மகாத்மா காந்தி பேரன்! முன் மாதிரி நடவடிக்கைகள் தொடர வேண்டும்!
ஸ்டாலினை பாராட்டிய மகாத்மா காந்தி பேரன்.
சென்னை: தமிழக சிறைகளில் கனரக சலவை இயந்திரங்கள் வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் முன் மாதிரி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என அவர் வாழ்த்தி கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காந்தி பேரன் எழுதிய கடிதம் வருமாறு;

கோபாலகிருஷ்ண காந்தி
மற்றொரு முன்மாதிரி நடவடிக்கையாக தங்களது அரசின் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையால் சிறைவாசிகளுக்கு, குறிப்பாக பெண் கைதிகளுக்கு உதவும் வகையில் சிறைச்சாலைகளில் கனரக சலவை இயந்திரங்கள் (Heavy duty Laundry machine) வழங்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியதாகும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவில் 1913 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சத்தியாகிரகத்தின் போது பெரும் பேரணியில் பங்கேற்றதற்காக தில்லையாடி வள்ளியம்மாள் மற்றும் கஸ்தூரிபாய் மோகன்தாஸ் காந்தி ஆகியோர் மாரிட்ஸ்பர்க் சிறையில் மூன்று மாதங்கள் கடுமையான சிறைத் தண்டனை அனுபவித்தனர். "தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்" என்ற புத்தகத்தில் காந்திஜி அவர்கள், அப்பெண்களுக்கு சிறையில் வழங்கப்பட்ட உணவு மிகவும் தரமற்றதாக இருந்தது என்றும், சிறையில் அவர்களுக்கு சலவை செய்யும் வேலை வழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கஸ்தூரிபா -வள்ளியம்மாள்
அவ்விரு பெண்களும் கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து பழகியவர்கள் என்றாலும், கடுமையான வேலை இருவருக்கும் சோதனையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களது ஆரோக்கியத்தையும் பாதித்தது.1914-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ம் தேதி தில்லையாடி வள்ளியம்மாள் காய்ச்சல் காரணமாக மரணமடைந்தார். கஸ்தூரிபா சிறையிலிருந்து விடுதலையான போது உடல்மெலிந்து காணப்பட்டதோடு, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1944 ஆம் ஆண்டு அதே பிப்ரவரி 22 அன்று ஆகாகான் அரண்மனை சிறையில் உயிரிழந்தார்.

ஸ்டாலினுக்கு பாராட்டு
சிறைச்சாலைகளில் கனரக சலவை இயந்திரங்கள் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாங்கள் மேற்கொண்ட மிகச்சிறந்த சீர்திருத்த நிகழ்வை அதே பிப்ரவரி 22 ஆம் நாளில் பகிர்ந்து கொள்ள விரும்பியதாக தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இனி சலவை இயந்திரங்கள் பயன்பாடு நமது மாநிலத்தில் உள்ள அனைத்து சீர்திருத்த இல்லங்களிலும் நிலையான நடைமுறையாக இடம்பெறும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொடர்ந்து சிறைச் சீர்திருத்தங்களை முன்னெடுத்து, அந்தத் துறையில், குறிப்பாக பெண் சிறைவாசிகளுக்கு உதவிடும் வகையில் ஒரு முன்மாதிரியாக திகழட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications