'ஷாக்..' மழைநீர் வடிகால் அமைக்கும் போதும் மண் சரிந்து விபத்து.. மே வங்க தொழிலாளி உயிரிழப்பு
சென்னை: தலைநகர் சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாய் தோண்டும் பணியின்போது மண் சரிந்து விபத்துக்குள்ளானதில், மண்ணுக்கு அடியில் சிக்கிய மேற்கு வங்க தொழிலாளி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை யானைகவுனி பகுதிக்குட்பட்ட வணிகவரித் துறை அலுவலகம் அருகே மழைநீர் வடிகால் அமைக்கும் பணி இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அங்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் கால்வாய்க்குள் இறங்கிப் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் மண் சரிந்து விழுந்தது.
மண் சரிவில் சிக்கிய ரஞ்சித் குமார் மயக்கமடைந்தார். இதனையடுத்து உடன் பணியாற்றியவர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு ரஞ்சித்தை மீட்டனர்.
மயங்கிய நிலையில் இருந்த ரஞ்சித்தை 108 ஆம்புலன்ஸ் மூலமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரஞ்சித் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அரசு ஒப்பந்ததாரர் செந்தூர் முருகன் என்பவரிடம் யானைக்கவுனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications