சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"வில்லனாக வந்துவிட்டது".. வானிலையில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த அப்டேட்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு வானிலை எப்படி இருக்கும், மழை பெய்யுமா என்பது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் வெளியிட்டு இருக்கிறார்.

வங்கக்கடலில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன் இந்த தாழ்வு பகுதி உருவானது. தற்போது இந்த தாழ்வு பகுதி வலுவடைந்து கொண்டு இருக்கிறது. இது அடுத்த மூன்று தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

டீசர் விட போகும் வானிலை.. தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்.. வெளியான ரிப்போர்ட்! டீசர் விட போகும் வானிலை.. தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்.. வெளியான ரிப்போர்ட்!

மழை

மழை

இதையடுத்து இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலையில் இருந்து மழை தீவிரம் அடையும். நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பின் 21ம் தேதி தமிழ்நாட்டில் மழை வேகம் எடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன்

தமிழ்நாடு வெதர்மேன்

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு பள்ளத்தாக்கு காற்று இந்த வடகிழக்கு பருவமழைக்கு எப்போதுமே வில்லன்தான். தற்போது வரப்போக உள்ள மழைக்கும் கூட இது வில்லனாகவே இருந்து வருகிறது. நமது மண்ணிற்கு வரும் மழையை அழுத்தி இது வெளியே தள்ளுகிறது. கண்டிப்பாக இந்த மேற்கு பள்ளத்தாக்கு காற்று நமக்கு ஹீரோ அல்ல. வில்லன்தான்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

தமிழ்நாட்டில் மழையை எதிர்பார்க்கலாம். ஆனால் அந்த மழை பெரிதாக பாதிக்க கூடிய மழையாக இருக்காது. என்ஜாய் செய்ய கூடிய சிறிய அளவிலான மழையாகவே இருக்கும். நாம் நமது இயல்பு வாழ்க்கையை தொடர வேண்டும். மலைவாசஸ்தலங்களில் விடுமுறை நாட்களை கொண்டாடும் மக்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் விடுமுறை நாட்களை மழை பெரிதாகி பாதிக்காது. தீவிர மழை பெய்யாது.

பயணம்

பயணம்

அதனால் நீங்கள் உங்கள் பயணத்தை திட்டமிட்டபடி தொடரலாம். முன்னதாக தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட வானிலை அறிவிப்பில், காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமானில் கிழக்கில் இருந்து மேற்கு திசையை நோக்கி, இலங்கையை நோக்கி 20/21 தேதிகளில் வரும். ஈரான்-பாகிஸ்தான்-காஷ்மீர் ஆகிய பகுதிகளில் இருந்து மேற்கு காற்று தரையில் இருந்து 5 கிமீ உயர மட்டத்தை நோக்கி நகர்கிறது. இது வில்லனாக மாறுமா, ஹீரோவாக இருக்குமா என்று தெரியவில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் தற்போது இதனால் பெரிய அளவில் மழை இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

என்ன சொன்னார்கள்?

என்ன சொன்னார்கள்?

முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், 21ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 22ம் தேதி இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றுள்ளனர்.

English summary
West trough is going to be a villain for the rains in NEM says Tamil Nadu Weatherman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X