"எதற்கும் துணிந்தவ"னுக்கு எதுக்கு போலீஸ் பாதுகாப்பு.. டிவிட்டரில் டிரென்டாகும் #WeStandWithSanthanam
சென்னை: ஜெய்பீம் சூர்யாவுக்கு எதிராக நடிகர் சந்தானம் விமர்சனம் செய்த நிலையில் #WeStandWithSanthanam என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது.
நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் உண்மைக் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாகும். இந்த படத்தில் பழங்குடியின சமூகத்தை உயர்த்தி கூறுவதற்காக வன்னியர் சமூகத்தை இழிவுப்படுத்தியுள்ளதாக வன்னியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதையடுத்து சூர்யாவுக்கு ஆதரவும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன. சமூகவலைதளங்களில் #WestandwithSurya என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது. சூர்யாவின் புகைப்படத்தை சமூகவலைதளவாசிகள் டிபியாக வைத்து ஆதரவு அளித்து வருகிறார்கள்.

பிரபலங்கள்
வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சில பிரபலங்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் சந்தானமோ நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஒருவரை உயர்த்துவதற்காக மற்றவர்களை தாழ்த்தி பேசக் கூடாது என ஜெய்பீம் சூர்யாவுக்கு அறிவுரை கூறியிருந்தார். இதையடுத்து அன்புமணி ராமதாஸின் மகள் திருமணத்தில் ராமதாஸுடன் சந்தானம் இருக்கும் புகைப்படம் வைரலானது.

பாடி ஷேமிங்
இதையடுத்து காமெடி என்ற பெயரில் அடுத்தவர்களை பாடி சேமிங் செய்யும் சந்தானம் அறிவுரை கூறலாமா என கேள்வி எழுப்பினர். இதையடுத்து டிக்கிலோனா படத்தில் மாற்றுத்திறனாளிகளை வேதனைப்படுத்தும்படியாக அவர் மாற்றுத்திறனாளியாக நடித்த வரை சைடு ஸ்டான்ட் என கிண்டல் செய்திருந்தார். இதற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன.

என்ன தகுதி
அது போல் நாளை மறுநாள் வெளியாகும் சபாபதி திரைப்படத்தில் ஒரு சுவற்றில் "தண்ணீர் திறந்துவிடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம், திரண்டு வாரீர்" என எழுதப்பட்டுள்ளது. அங்கு கிண்டலாக சந்தானம் நின்று சிறுநீர் கழிப்பது போல் உள்ளதை சுட்டிக் காட்டி நெட்டிசன்கள், ஒரு மாநில உரிமைக்கான போராட்டத்தை சிறுநீர் கழித்து கொச்சைப்படுத்திவிட்டு ஜெய்பீம் சூர்யாவுக்கு அட்வைஸ் செய்வதற்கு என்ன தகுதி உள்ளது என கேட்டுள்ளார்கள்.

டிரென்டாகும் ஹேஷ்டேக்
இந்த நிலையில் நடிகர் சந்தானத்திற்கு ஆதரவாக #WeStandWithSanthanam என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது.
|
தப்பு
ஒருத்தன் முதல்ல என்ன பேசுறானு கேளுங்க அது இல்லாமா அவன் பேசின One line ய வெச்சு முடிவு எடுப்பது தப்பு என்கிறார் இந்த வலைஞர்.

போலீஸ் பாதுகாப்பு
எதற்கும் துணிந்தவனுக்கு எதுக்கு போலீஸ் பாதுகாப்பு என கேட்டுள்ளார் இந்த வலைஞர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications