தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

வெப்ப நிலையை இயல்பு நிலையில் இருப்பதால் வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
தென் மேற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 6 சென்டிமீட்டரும், தேனி மாவட்டம் பெரியாறில் 4 சென்டிமீட்டரும், கோவை மாவட்டம் வால்பாறையில் 2 சென்டிமீட்டரும், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 1 சென்டிமீட்டரும், மழை பதிவாகியுள்ளது.
முன்னதாக, தென் மேற்கு, மத்திய வங்கக் கடல் பகுதியில் தென் மேற்கு திசையில் மணிக்கு 40ல் இருந்து 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் தென்மேற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை












Click it and Unblock the Notifications