ராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு தெரிவித்து #WeSupportSeeman என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்காகி வருகிறது.

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் பேசிய சீமான், நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும்.

#WeSupportSeeman hashtag trending in Twitter

அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும என்றார்.

அவரது பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சீமான் மீது போலீசாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் தமது பேச்சை திரும்பப் பெறப் போவதில்லை; வழக்கை சந்திக்க தயார்; அமைதிப்படையின் அட்டூழியங்கள் பற்றி காங்கிரஸார் விவாதிக்க தயாரா? என எதிர்கேள்வி கேட்டிருக்கிறார் சீமான்.

தற்போது சீமானுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது. #WeSupportSeeman என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு தற்போது அது ட்விட்டரில் டிரெண்டிங்காகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+