குரூப் 4 ரிசல்ட் கேட்டு டிஎன்பிஎஸ்சியை தெறிக்கவிடும் தேர்வர்கள்.. ட்விட்டரில் டாப் ட்ரெண்ட்டிங்!
சென்னை: கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி சார்பில் 7,301 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 18 லட்சம் பேர் பங்கேற்றனர். 7 மாதங்கள் கடந்தும் கூட தேர்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை. இதனால் தேர்வு எழுதியவர்கள் டிஎன்பிஎஸ்சி மீது கோபமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் இன்று டிஎன்பிஎஸ்பி குரூப் 4 தேர்வு ரிசல்ட்டை உடனடியாக வெளியிட வேண்டும் எனக்கூறி ட்விட்டரில் WeWantGroup4Results எனும் ஹேஷ்டேக் டாப் டிரெண்ட் ஆனது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி அரசு வேலைகளை பெற தமிழ்நாடு முழுவதும் பட்டதாரிகள் தயாராக உள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி செயல்பாடு என்பது சமீபகாலமாக அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

டிஎன்பிஎஸ்சி மீது தொடரும் குற்றச்சாட்டு
சமீபத்தில் நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மெயின் தேர்வில் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு வினாத்தாளில் பதிவெண்களால் குளறுபடி ஏற்பட்டது. இதனால் பல மையங்களில் தேர்வுகள் தாமதமாக துவங்கின. இதனால் சில தேர்வர்கள் வினாத்தாளில் இருந்த கேள்விகளை பார்த்தபிறகு அதற்கான விடைகளை அறிந்து தேர்வு எழுதியதாக புகார்கள் எழுந்தன. இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறியும் டிஎன்பிஎஸ்சி அமைதி காத்து வருகிறது.

வெளியிடப்படாத குரூப் 4 ரிசல்ட்
இது ஒருபுறம் இருக்க டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரிசல்ட் முடிவுகள் வெளியிடப்படாமல் உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு 7,301 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் குரூப் 4 தேர்வுகள் நடந்தது. ஜூலை மாதம் 24ம் தேதி தேர்வர்கள் தேர்வு எழுதினர். மார் 18 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கூறியபடி ரிசல்ட் வெளியாகவில்லை. தற்போது 7 மாதங்கள் கடந்தும் இன்னும் குரூப் 4 தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிடாமல் உள்ளது.

ட்விட்டரில் டிரெண்ட்
இந்த விஷயத்தில் டிஎன்பிஎஸ்சி மந்தமாக செயல்பட்டு வருகிறது. இதனால் தேர்வர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் இன்று ட்விட்டரில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க தொடங்கி உள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகளை கேட்டு ட்விட்டரில் இன்று தேர்வர்கள் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

ஹேஷ்டேக் என்ன?
அதன்படி குரூப் 4 தேர்வு முடிவுகளை உடனடியாக டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும் என தேர்வர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த பதிவுகளை அவர்கள் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக்கில் வெளியிடுகின்றனர். இதனால் #WeWantGroup4Results எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட்டிங்கில் உள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சியை விமர்சித்தும், டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் நிலையை எடுத்து கூறும் வகையிலும் மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன. இன்று மதியம் 1.30 மணி நிலவரப்படி #WeWantGroup4Results எனும் ஹேஷ்டேக்கில் மொத்தம் 93 ஆயிரம் ட்விட்கள் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து இந்த ஹேஷ்டேக் டாப் டிரெண்டிங்கில் உள்ளதால் ட்விட்டுகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தொட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டிசிஎஸ், இன்போசிஸ் தான் இப்படி என்றால்.. நீங்களுமா..? டெக் ஊழியர்கள் மொத்தமாக கைவிடப்பட்டனர்! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள்! என்ஜினியரிங் முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications