"சான்ஸே" இல்லை.. கோலிவுட்டை உலுக்கிய இளம் நடிகை தற்கொலை.. அந்த "ஐபோன்" எங்கே? உடையும் மர்மம்?
சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் காதல் தோல்வியால் நடிகை ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மரணம் தொடர்பாக கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
ஆந்திராவை சேர்ந்தவை மௌலி என்கிறவர் தீபா. சினிமா மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வந்துள்ளார்.
திரைப்பட வாய்ப்புகளை தேடி சென்னையில் பலரை சந்தித்து வாய்ப்புகளை கேட்டுள்ளார். விருகம்பாக்கத்தில் வீடு எடுத்து தங்கி வந்துள்ளார்.

சென்னை
சென்னையில் இருந்த தீபாவிற்கு சினிமாவில் சில வாய்ப்புகளும்., சின்ன திரையில் சில வாய்ப்புகளும் கிடைத்துள்ளன. அதேபோல் சில விளம்பர படங்களிலும் இவர் நடித்து உள்ளார். இன்ஸ்டாவிலும் இவர் பிரபலமாக இருந்துள்ளார். இதன் மூலம் சினிமாவில் நடிகையாக வாய்ப்பு பெற்றவர், வாய்தா என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் பெரிதாக ஓடாத நிலையில், அடுத்த பட வாய்ப்புகளுக்காக இவர் காத்திருந்துள்ளார்.

தற்கொலை
இந்த நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீபா தனது குடும்பத்தினருக்கு போன் செய்துள்ளார். எப்போதும் சந்தோசமாக பேசும் அவர்..அன்றும் ஜாலியாக சிரித்தபடி பேசி உள்ளார். இங்கே நன்றாக இருக்கிறேன். ஆடிஷன் போக இருக்கிறேன். அடுத்த வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என்று நம்பிக்கையாக பேசி உள்ளார். இந்த நிலையில்தான் திடீரென சனிக்கிழமை இரவு தீபா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

தீபா
தீபாவை சந்திக்க வீட்டின் உரிமையாளர் நேற்று அதிகாலை வந்த போது கதவு திறக்கவில்லை என்பதால் சந்தேகம் ஆகி, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தார். உள்ளே தீபா தனது துப்பட்டாவில் தூக்கு போட்டு தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளார். தகவலை கேட்டு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தீபா வீட்டில் மேஜையில் ஒரு கடிதம் இருந்துள்ளது.

காதல்
அதில் தான் ஒருவரை காதலித்ததாகவும், காதல் கைகூடவில்லை என்பதால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி இருக்கிறார். இந்த நிலையில் விஷயம் அறிந்து தீபாவின் குடும்பத்தினர் உடனே சென்னைக்கு வந்துள்ளனர். அவர்கள் அளித்த பேட்டியில், தீபா இப்படி முடிவு எடுக்க மாட்டார். அவர் இப்படி அவசரமாக முடிவு எடுக்கும் நபர் அல்ல. அவர் தைரியமாக இருப்பார். போல்ட்டாக முடிவு எடுப்பார். அவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவர் இப்படி முடிவு எடுக்க மாட்டார்.

மரணம்
எங்களுக்கு ஒருவர் மீது சந்தேகம் உள்ளது. வெளியே சொல்ல முடியாது. போலீசில் தெரிவித்து உள்ளோம். அவர்கள் விசாரித்து வருகிறார்கள். தீபாவின் போனை காணவில்லை. அவரின் ஐபோன் எங்கே என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இவரின் இன்னொரு போனை சோதனை செய்த போலீசார், அதில் தற்கொலைக்கு முன் ஒருவரிடம் நீண்ட நேரம் பேசியது தெரிய வந்துள்ளது. அந்த நபரை கண்டுபிடித்து, அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications