Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு கிராம் தங்கம் ரூ.10,000க்கு போகும்.. மெகா மேட்டரை சொல்லும் ஆனந்த் சீனிவாசன்! எப்போது தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில காலமாகவே பெரியளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமல் இருக்கும் நிலையில், இப்போது தங்கத்தை வாங்குவது சரியான முடிவாக இருக்குமா என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

எப்போதும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் முதலில் சேமிப்பது தங்கத்தில் தான். ஆபத்தான காலத்தில் தங்கம் தான் நமக்கு மிகப் பெரியளவில் கை கொடுக்கும் என்பதால் தங்கத்தில் முதலீடு செய்யவே விரும்புவார்கள்.

 What Anand Srinivasan says about current gold price movement

இதன் காரணமாகவே தங்கத்தின் இறக்குமதி அதிகரித்தே வரும். இப்போது பண்டிகை காலம் நெருங்கி இருக்கும் நிலையில், தங்கத்தை வாங்குவது சரியாக இருக்கும் என்பதே பலருக்கும் டவுட். இது குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

தங்கம்: இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், "சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து நாம் இறக்குமதி செய்யும் தங்கத்தின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவில் தான் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்துள்ளது. இது கடந்த மாத வர்த்தக பற்றாக்குறை அறிக்கையிலேயே நமக்குத் தெரிந்தது. தங்க இறக்குமதி 40% வரை அதிகரித்துள்ளது. இந்த மாதமும் அடுத்த மாதமும் கூட தங்கத்தின் இறக்குமதி அதிகரிக்கவே செய்யும்.

தீபாவளி, நவராத்திரி உட்பட பண்டிகை காலம் இந்தாண்டு லேட்டாகவே வருகிறது. இந்தாண்டு கல்யாண சீசனும் தீபாவளியும் ஒரு மாதிரி மிக்ஸ் ஆகி வருகிறது. எனவே, இந்தாண்டு தீபாவளி ஷாப்பிங் நீட்டித்த ஒன்றாக இருக்கும்.

இந்தியாவில் இப்போது கொரோனாவுக்கு பிறகு கே ஷேப் வளர்ச்சி இருக்கிறது. அதாவது பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆகி வருகிறார்கள். அதேபோல ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாக மாறி வருகிறார்கள். பஜாஜ் குழுமத்தின் சிஇஓ ராஜீவ் பஜாஜ் கூட இது குறித்துக் கூறியுள்ளார். இதன் காரணமாகவே அவர்கள் குறைந்த விலை கொண்ட 100 சிசி பைக் உற்பத்தியைக் குறைத்து, அதிக சிசி பைக் உற்பத்தியில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளனர்

தங்கம் வாங்குவது அதிகரிப்பு: ஆகஸ்ட் மாதம் நாட்டில் பருவமழையும் பொய்த்துவிட்டது. இது என்ன சொல்கிறது என்றால் பணக்காரர்கள் நிச்சயம் மேலும் மேலும் தங்கத்தை வாங்கப் போகிறார்கள். எனவே, தங்கத்தின் விலை வரும் நாட்களில் நிச்சயம் அதிகரிக்கும். தங்கத்தின் விலை அதிகரிக்காமல் இருக்கும் நிலையில், தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் கோல்ட் பீஸை (தங்கத்தின் அடிப்படையில் இது இருக்கும்) கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்குப் பொதுமக்கள் அதிகமாக இந்த ஆகஸ்ட் மாதம் வாங்கியுள்ளனர்.

நான் முன்பே கூறியது போல தங்கத்தின் விலை இப்படியே தான் இருக்கும். தங்கத்தை வாங்க அடுத்த 6,7 மாதம் நல்ல சான்ஸ். தங்கத்தில் அடுத்த குறிப்பிடத் தகுந்த விலை ஏற்றம் என்பது இன்னும் 18 மாதங்கள் கழித்தே வரும். எனவே, தங்கத்தை மக்கள் வாங்குவது அதிகரிக்கவே செய்யும்.

நல்ல வாய்ப்பு: மேலும், ரிசர்வ் விலைவாசி உயரவில்லை என்று சொன்னாலும், உண்மையில் விலைவாசி உயர்கிறது என்பதே உண்மை. இதனால் மக்கள் வலியில் உள்ளனர். விலைவாசி உயர்வால் இதுபோல வலி ஏற்பட்டால் மக்கள் பொதுவாகத் தங்கத்தை நோக்கிச் செல்வார்கள், அதுவும் தங்கம் விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாகும்.

இப்போது தங்கம் விலை 5,500 என்ற ரேஞ்சில் இருக்கிறது. நிச்சயம் தங்கம் விலை 10,000 ரூபாய்க்குச் செல்லும் அது எப்போது என்பதே இங்கே கேள்வியாக இருக்கிறது. அடுத்த 18 மாதங்களுக்குத் தங்கத்தின் விலையில் பெரியளவில் மாற்றம் இருக்காது. அதன் பின்னரே தங்கம் விலை அதிகரிக்கும். எனவே, இந்த 18 மாதங்கள் தங்கத்தை வாங்க மகத்தான ஒரு வாய்ப்பு. மிஸ் பண்ணாதீங்க" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+