ஒரு குண்டு கூட போடலையே... இந்தியா தாக்குதல் நடத்தும் முன்பே.. கதறும் பாகிஸ்தான்.. 10 பயங்கர சம்பவம்
டெல்லி: பாகிஸ்தான் மீது இந்தியா இன்னும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தவில்லை. எல்லை தாண்டி தாக்குதல் நடத்தவில்லை. பாகிஸ்தான் மீது எந்த விதமான ஏவுகணை பதிலடி தாக்குதல்களையும் நடத்தவில்லை. ஆனால் இப்படி எதுவும் செய்யாமல் இந்தியா பாகிஸ்தானை பதற விட்டுள்ளது.
தொடர்ந்து 10வது நாளாக நேற்று ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எந்தவித தூண்டுதலும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளுக்கு எதிரே உள்ள நிலைகளில் இருந்து சிறிய ரக துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. 740 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூடுக்கு இந்திய ராணுவம் உடனுக்குத்தான் பதிலளித்தது.
ஏப்ரல் 24 ஆம் தேதி இரவு முதல் இந்த துப்பாக்கி சூடு நடந்து வருகிறது. சிந்து நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் துருப்புக்கள் தூண்டுதலின்றி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றன. இதன் மூலம் 10வது நாளாக பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தி உள்ளது. நேற்று இரவு முழுவதும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எந்தவித தூண்டுதலும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியது.

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளுக்கு எதிரே உள்ள நிலைகளில் இருந்து சிறிய ரக துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. 740 கிலோமீட்டர் நீளமுள்ள நடைமுறை எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவம் பதிலளித்தது.
இந்தியா இதற்கு மட்டுமே பதிலடி தருகிறது. மற்றபடி பாகிஸ்தான் மீது இந்தியா இன்னும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தவில்லை. எல்லை தாண்டி தாக்குதல் நடத்தவில்லை. பாகிஸ்தான் மீது எந்த விதமான ஏவுகணை பதிலடி தாக்குதல்களையும் நடத்தவில்லை. ஆனால் இப்படி எதுவும் செய்யாமல் இந்தியா பாகிஸ்தானை பதற விட்டுள்ளது. பாகிஸ்தானில் முக்கியமாக 10 அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
1. பொதுவாக பார்வையாளர்களால் பரபரப்பாகவும், பசுமையான நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்றதாகவும் இருக்கும் பாகிஸ்தானின் நீலம் பள்ளத்தாக்கு வெறிச்சோடி உள்ளது. ஹோட்டல்கள் காலியாக உள்ளன. மேலும் உள்ளூர் வாசிகளும் வெளியேறி விட்டனர். பாகிஸ்தானின் செயல்கள் அந்த நாடு மிக நீண்ட போருக்கு தயாராவதை உறுதி செய்கிறது.
2. அங்கே 2 மாதங்களுக்கு உணவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) உள்ள 13 தொகுதிகளில் இரண்டு மாதங்களுக்கு உணவுப் பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. உணவு, மருந்துகள் மற்றும் பிற அனைத்து அடிப்படைத் தேவைகளையும் வைத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது.
3. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பதட்டம் இன்னும் தெளிவாகத் தெரிகிறது. எல்லைப் பதட்டங்களை காரணம் காட்டி, 1,000க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டுள்ளன. முசாபராபாத் மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே உள்ள நகரங்களில், பள்ளி, மதரஸாக்கள் தற்காலிக பயிற்சி முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
4. அங்கே 11 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீயை அணைக்கும் கருவிகளைப் பயன்படுத்துவது, முதலுதவி அளிப்பது மற்றும் காயமடைந்த வகுப்பு தோழர்களை ஸ்ட்ரெச்சர்களில் சுமந்து செல்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள்.
5. கோஸ்ட் டவுன் என்று அழைக்கும் அளவிற்கு சுற்றுலாத் தலங்கள் ஆட்களே இல்லாத பேய் நகரங்களாக மாறி வருகின்றன. கடைகள் கூட காலியாகி உள்ளன.
6. எல்லையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சகோதி போன்ற கிராமங்களில், பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டிற்குள் வைத்திருக்கிறார்கள்.
7. மேலும் பதுங்கு குழிகள் வலுப்படுத்தப்படுகின்றன. அவர்கள் பள்ளியிலிருந்து நேராக வீடு திரும்பும் வரை ஆட்கள் வைத்து பாதுகாப்பு அளிக்கிறார்கள்.
8. முக்கியமான இடங்களில் ராணுவ வாகனங்கள் குவிக்கப்பட்டு உள்ளன.
9. முப்படைகள் எல்லையை நோக்கி நகர்த்தப்பட்டு உள்ளன.
10. மிக முக்கியமாக பாகிஸ்தானில் முக்கிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications