2024ல் ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்..ஜூன் 4க்கு பின் என்னவெல்லாம் நடக்கும்? 10 முக்கிய விஷயங்கள்
சென்னை: 2024ல் ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், இந்தியாவில் ஜூன் 4க்கு பின் என்னவெல்லாம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2024 லோக்சபா தேர்தல் கிளைமேக்ஸை நெருங்கும் நிலையில், அரசியல் ஆராய்ச்சியாளர் யோகேந்திர யாதவ், தற்போதைய அரசியல் நிலவரப்படி பாஜக 250க்கும் குறைவான இடங்களையே பெறும். பாஜக மெஜாரிட்டி பெற வாய்ப்பு இல்லை. முக்கியமாக தேர்தல் இறுதிக்கட்டத்தின் போது உ.பி. மற்றும் பீகாரில் இருந்து பாஜக எதிர்ப்பு வாக்குகள் அதிகம் ஆகும் பட்சத்தில் பாஜகவிற்கு மட்டுமல்ல என்டிஏவுக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். என்டிஏவை விட இந்திய கூட்டணி அதிக இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும். இந்தியா கூட்டணி 250 இடங்களை தாண்டி பெற வாய்ப்புகள் உள்ளன.

பாஜக தனித்து மெஜாரிட்டி பெறுவதற்கான வாய்ப்புகள் தற்போது குறைவாகவே உள்ளன. சிலர் சர்வே ரீதியாக பொய்களை சொல்கின்றனர்., என்று அரசியல் ஆராய்ச்சியாளர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
யோகேந்திர யாதவ் மட்டுமின்றி இன்னும் பலர் இதே போன்ற சர்வேக்களை தெரிவித்து வருகின்றனர். அதாவது பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காது. என்டிஏவிற்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது. கண்டிப்பாக பாஜகவிற்கு இது சிக்கலை ஏற்படுத்தும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
என்ன நடக்கும்?: 2024ல் ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அதாவது பாஜக, என்டிஏ கூட்டணி இல்லாத ஆட்சி, எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி ஏற்பட்டால், ஜூன் 4க்கு பின் என்னவெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜூன் 4க்கு பின் நடக்க சாத்தியமான 10 விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
1. எதிர்க்கட்சி கூட்டணிகள் பல அமைச்சர்கள், மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சிறையில் உள்ளனர். சிறையில் உள்ள செந்தில் பாலாஜி உட்பட பலர் விடுதலை ஆக வாய்ப்புகள் உள்ளன. அமலாக்கத்துறை இது போன்ற வழக்குகளில் ஜாமீனை எதிர்க்காமல் போகலாம் அல்லது வழக்கில் சுணக்கம் காட்ட தொடங்கலாம். ஆட்சி மாறினால் அமலாக்கத்துறை காட்சியும் மாறும்.
2. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை நடத்தும் பல வழக்குகள் கைவிடப்பட வாய்ப்புகள் உள்ளன.
3. ஆளும் தரப்பு மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வழக்குகள் பாயும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக தேர்தல் நிதி பத்திரம், பிஎம் கேர்ஸ் நிதி தொடர்பான விசாரணைகள் தொடங்கலாம்.
4. சிஏஏ கைவிடப்படுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
5. அக்னிவீர் திட்டம் கைவிடப்படுவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
6. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இப்படி நிலுவையில் உள்ள பல சட்ட ,மசோதாக்கள் உடனே ஒப்புதல் பெறப்படலாம்.
7. மாநில ஆளுநர்கள் எல்லோரும் அல்லது பலரும் அடுத்தடுத்து அல்லது ஒரே நாளில் ராஜினாமா செய்வார்கள். தமிழ்நாடு ஆளுநர் உட்பட.
8. நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட மாநில அரசுகளின் பல கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளன.
9. பல மாநில கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு உள்ளதால் திமுக உட்பட பல கட்சிகளில் சில மாற்றங்கள் நடக்கும். மத்திய அமைச்சரவைக்கு ஏற்றபடி கட்சி பதவிகள் மாறலாம்.
10. யார் பிரதமராக வருகிறார் என்பதை பொறுத்து நாட்டின் மார்க்கெட், விலைவாசி தொடங்கி சட்ட ஒழுங்கு வரை பலவும் ஜூன் 4ம் தேதிக்கு பின் மாறும் வாய்ப்புகள் உள்ளன.












Click it and Unblock the Notifications