Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினின் கனவு.. சரியாக ரூட் போட்டு கொடுத்த பிடிஆர்.. தமிழ்நாடு மக்களுக்கு 30 குட் நியூஸ்.. அடிதூள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2 வருடமாக தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் அறிவிப்புகளில் முக்கியமான 30 திட்டங்களை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. இதில் 1 பாதி பட்ஜெட். இரண்டு முழு பட்ஜெட்டுகளை நிதி அமைச்சர் பிடி ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உள்ளார்.

இந்த பட்ஜெட்டுகளில் பல முக்கியமான அறிவிப்புகளை அமைச்சர் பிடிஆர் கடந்த 2 வருடங்களில் வெளியிட்டு இருக்கிறார். இந்த பட்ஜெட்டுகள் காரணமாக தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது. மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வருவாய் பற்றாக்குறை குறைவாக உள்ளது. இதற்கு காரணம் கடந்த 2 வருட ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வருவாய் சீர்திருத்தங்கள்தான்.

What are the 30 announcements made by Tamil Nadu CM Stalin and Minister PTR Palanivel Thiagarajan in Tamil Nadu budgets?

முக்கியமாக வருவாய் பற்றாக்குறை கடந்த ஆட்சியில் 62 ஆயிரம் கோடியாக இருந்தது. இதை 30 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத்து உள்ளோம். கடும் நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு மாற்றத்தை செய்து இருக்கிறோம் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையின் போது தெரிவித்தார். கடந்த 2 ஆண்டு பட்ஜெட்டுகளில் அவர் வெளியிட்ட 30 முக்கியமான அறிவிப்புகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

1. கடந்த வருடத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் டாப் அறிவிப்பு என்றால் அது மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம்தான். அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை தரப்படும் திட்டம். ஏற்கனவே இருந்த மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவித்தொகை திட்டம் உயர்கல்வி உதவித்திட்டமாக மாற்றப்பட்டது. தற்போது அது செயல்பாட்டுக்கு வந்து மாணவிகளிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தின் படி அரசு பள்ளிகளில் 6 - 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

2. உயர்கல்வித் துறைக்கு ரூ.5,568 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.36,785 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இல்லம் தேடி கல்வித்திட்டத்திற்கு ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

3. தமிழ்நாட்டில் மருத்துவத் துறைக்கு ரூ.17,901 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 19 மாவட்டங்களில் புதிய தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்படும். இதற்கு ரூ.1,019 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

4. முன்னெப்பதும் இல்லாத அளவிற்கு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 4281.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் முக்கியமாக இருளர்களுக்கு மொத்தமாக 1443 வீடுகள் கட்டித்தரப்படும் என்று நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இதற்கு மொத்தமாக 70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5. சென்னையில் வருடா வருடம் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க இந்த முறை முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி சென்னையில் வெள்ளத்தை தடுக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது சென்னைக்கு வெள்ளத்தை தடுக்க பெரிய அளவில் உதவியாக மாறி உள்ளது.

6. சுற்றுசூழல் துறைக்கு ரூ.849 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வேளாண் துறையில், வட்டியில்லா பயிர்கடன் தொடர்ந்து வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேபோல் கால்நடைப் பராமரிப்பு துறைக்கு ரூ.1,315 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

7. கோயில்களை போல தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்களை பழுது பார்க்கவும் புனரமைப்பதற்காகவும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து உள்ளார். கோயில்களை பொறுத்தவரை 1000 ஆண்டுகளுக்கு பழமையான ஆலயங்களை புனரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், இந்து சமய அறநிலையத்துறைக்கு மட்டும் ரூ.340.87 கோடி ஒதுக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்து இருந்தார்.

8. மாநகர பேருந்துகளில் மகளிர் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ள ரூ.1520 மானியம் அளிக்கப்படும்.

9. கோவையில் கைத்தொழில் மேம்பாட்டு குழுமம் அமைக்க ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கோவை, வேலூர், பெரம்பலூரில் புதிய தொழில் பூங்காக்கக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

10. தாமிரபரணி படுகையில் கண்டறியப்பட்ட தொல்பொருட்கள் 3,200 ஆண்டுகள் பழமையானதாகும். தாமிரபரணி ஆற்றுப் படுகை தொல்பொருட்கள் மூலம், தமிழர் தம் வரலாறு எவ்வளவு தொன்மையானது என மீண்டும் உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு, 2 இடங்களில் தல ஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

11 அணைகளை புனரமைக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 64 பெரிய அணைகளை புனரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

12. நீர் வள பயன்பாட்டை சரி செய்ய ரூ.3384 கோடி மூலம் பாசன அமைப்பு ஏற்படுத்தப்படும்.

13 சிங்கார சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ₹1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. லண்டனை சேர்ந்த கீ கார்ட்னஸ் அமைப்புடன் சேர்ந்து தாவரவியல் பூங்கா அமைக்கப்படும். சென்னை அருகே 300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.

14. மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலையை மீட்டெடுத்து நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது; 20 கிமீ தொலைவு ஈரடுக்கு உயர்மட்ட சாலையாக அமையவுள்ளது. மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

15 உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ படிப்பைத் தொடர தேவையான உதவிகளை அரசு வழங்கும்.

16. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு.நகர்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8737 கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு. பிரதமரின் வீடு வசதித்திட்டத்திற்கு ரூ. 3700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

17 . காஞ்சிபுரத்தில் அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, உயர்தர மருத்துவமனையாக மேம்படுத்தப்படும். செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.25 கோடியில் சமூக மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

18 . நூறு நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.2800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஏழை மக்களுக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்ட ரூ. 2030 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

19. முதல்வரின் முகவரி மூலம் 10 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 149 சமத்துவபுரங்களைச் சீரமைக்க ரூ. 190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்டத்திற்கு ரூ.2,542 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

20 . 500 மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளும் 2213 டீசலில் இயங்கும் பேருந்துகளும் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பம் தற்போது பெறப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ. 1062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்திற்கு ரூ.1949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சமூக நலத்துறைக்கு ரூ. 5922.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

What are the 30 announcements made by Tamil Nadu CM Stalin and Minister PTR Palanivel Thiagarajan in Tamil Nadu budgets?

இந்த வருட பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட சில அறிவிப்புகள்

21. தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் செப்டம்பரில் வழங்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதற்கான லிஸ்ட் எடுக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது. இதில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் என வசதி உள்ளவர்களைத் தவிர்த்து, உண்மையிலேயே ஏழைப் பெண்களாக இருக்கும் 1 கோடிப் பேருக்கு இந்தத் திட்டத்தின் மூலம் பயன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

22. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.7145 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். ரூ77,000 கோடியில் புதிய மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும். ரூ 880 கோடியில் சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் நகர்ப்புற பொதுச்சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் ஆகிய நவீன வசதிகள் அமைத்திட ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

23. 1000 புதிய பேருந்துகள், 500 பழைய பேருந்துகளை புதுப்பிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வழபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் ₹1600 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

24. சென்னை கோடம்பாக்கம்- பூவிருந்தவல்லி மெட்ரோ ரயில் திட்டம் 2025-ல் நிறைவு செய்யப்படும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ10,000 கோடி நிதி ஒதுக்கீடு.

25. ரூ100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

26. ரூ1,000 கோடியில் வட சென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும், தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரங்கள் குளங்கள், நீர் நிலைகள் தூய்மைப்படுத்தப்படும். அடையாறு , கூவம் பகுதிகளை மறுசீரமைக்க ரூ. 1,500 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

27. ரூ621 கோடியில் சென்னை அண்ணாசாலையில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும். சென்னை தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை இடையே 4 வழி மேம்பாலம் கட்டப்படும். ரூ621 கோடியில் சென்னை அண்ணாசாலையில் 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும்.

28. எழில்மிகு கோவை, மாமதுரை திட்டங்கள் மூலம் 2 நகரங்கள் மேம்படுத்தப்படும். ரூ172 கோடியில் கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ₹9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ₹8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

29. பள்ளி கல்வித்துறைக்கு ரூ40,299 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பள்ளி கல்வித்துறையின் கீழ் அனைத்து துறை பள்ளிகளும் கொண்டு வரப்படும். அறநிலையத்துறை கீழ் செயல்படும் பள்ளிகள் கல்வித்துறைக்கு கீழ் கொண்டு வரப்படும். புதிய வகுப்பறைகள், ஆய்வகங்களுக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்., 2 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ரூ1,500 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

30 . தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப்படுத்தப்படும். வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்கு 500 கோடி ரூபாய் செலவு செய்யப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+