ஓபன் டாக்.. "நாமும் உடம்பை சிலுப்ப முடியாது".. கோபத்தின் உச்சிக்கே போன "ஸ்டாலின்".. 5 காரணங்கள்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் நீண்ட காலத்திற்கு பின் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவரின் அறிக்கைக்கு பின் சமீபத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. அது என்னென்ன காரணங்கள்.. பார்க்கலாம்!
காரணம் 1 - மூத்த அமைச்சர் பொன் முடி இலவசங்கள் பற்றி பேசியதாக நேற்று காலையில் இருந்து வீடியோ ஒன்று இணையத்தில் சுற்றி வருகிறது. இலவச திட்டங்கள் குறித்து மக்களுடன் இவர் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாகி உள்ளன.
அதே சமயம் அவர் பேசிய விஷயங்களை "சிலர்" கட் செய்து தவறான அர்த்தம் வரும் படி இணையத்தில் பரப்பி வருகிறார்கள். மக்களை அவமானப்படுத்தி அவர் பேசியதாக கூறி இணையத்தில் தவறாக செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இது போல சமீபத்தில் திமுக தலைவர்களை குறி வைத்து சில முக்கியமான வதந்திகள் பரப்பப்பட்டன.

என்ன நடந்தது?
காரணம் 2 - சமீபத்தில் அதியமான் கோட்டத்தில் நூலக பூமி பூஜையின் போது எல்லா மதத்தினரும் ஏன் இல்லை என்று திமுக எம்பி செந்தில் குமார் கேள்வி எழுப்பி இருந்தார். அந்த நேரத்தில், அவரின் வீடியோவை வெட்டி ஒட்டி சிலர் பகிர்ந்து இருந்தனர். அதில், செந்தில் குமார் எம்பி செங்கல்லை காலால் தள்ளிவிட்டதாக பொய்யான செய்திகளை பரப்பினார்கள். சில ஊடகங்கள் கூட இந்த செய்திகளை வெளியிட்டு இருந்தன. ஆனால் இதை எம்பி செந்தில்குமார் உடனே மறுத்தார்.

ராசா பேச்சு
காரணம் 3 - இதேபோல் ஆ. ராசா இந்து மதம் பற்றி பேசிய போதும் கூட அதை சிலர் தவறாக வெட்டி ஒட்டி விமர்சனம் செய்து இருந்தனர். அவர் இந்து மதத்தில் உள்ள பழக்க வழக்கங்களுக்கு எதிராக பேசி இருந்தாலும், அவர் சொன்ன விஷயங்கள் வெட்டி தவறான பொருள்படும்படி கடுமையாக தாக்கி இருந்தனர். இணையத்தில் மட்டுமின்றி நேரடியாகவும் திமுக தலைவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது.

பிடிஆர்
காரணம் 4 -சமீபத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டதுகுறிப்பிடத்தக்கது . பாஜகவின் இந்த செயலை கூட முதல்வர் ஸ்டாலின் 24 மணி நேரம் கழித்தே கண்டித்து இருந்தார். இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிடுவதை தவிர்த்து வந்தார். பொதுவாகவே பாஜகவிடம் இருந்து வரும் விமர்சனங்களை அவர் பொருட்டாக கூட மதிப்பது இல்லை. எடப்பாடியின் " தமிழ்நாட்டில் 4 முதல்வர்கள் இருக்கிறார்கள்" என்ற கமெண்ட்டிற்கு மறுநாளே மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

பாஜக அண்ணாமலை
ஆனால் பாஜக அண்ணாமலை கொடுக்கும் பேட்டிகளை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் பொருட்டாக கூட மதிப்பது இல்லை. ஆனால் திமுகவினர் சிலர்.. முதல்வரும் இதற்கெல்லாம் ரியாக்ட் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். முதல்வர் இதை எல்லாம் கண்டிக்க வேண்டும். நாகரீக அரசியல் பார்க்க கூடாது. பாஜக நாகரீக அரசியல் செய்யவில்லை. அதனால் நாமும் உடனுக்குடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஜெயலலிதா மாற்று கட்சியினரை டீல் செய்தது போல இவர்களை ஸ்டாலின் டீல் செய்ய வேண்டும் என்று திமுகவினரே கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.

அத்துமீறல்
காரணம் 5 - இது போக சமீபத்தில் பாஜகவினர் அத்துமீறி முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகவே பொய்யான போஸ்டர் ஒன்றையும் ஒட்டினார்கள். முதல்வர் ஸ்டாலின் குறித்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த 11ம் தேதி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இந்த போஸ்டர்கள் ஊடகம் ஒன்றின் அட்டைப்படம் போல வடிவமைக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் குறித்து வெளியாகாத ஒரு செய்தியை வெளியானது போல வடிவமைப்பு செய்து பல இடங்களில் போஸ்டர்களாக ஒட்டி இருந்தனர். மு.க.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

அண்ணாமலை ஸ்டாலின்
இதில் அண்ணாமலை பிஏ கைது செய்யப்பட்டாலும் முதல்வர் ஸ்டாலின் அதை பற்றி எதுவுமே சொல்லவில்லை. ஆளும் தரப்பும் அதை பெரிதாக்காமல் விட்டது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் தான் அமைதியாக இருப்பது ஏன் என்று விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்த ஆட்சிக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்ற தீயநோக்கம் கொண்ட சில அரசியல் சக்திகள் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நச்சு சக்திகளுக்கு எந்தவகையிலும் நாம் இடம் கொடுக்காமல் நம்முடைய பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பத்து ஆண்டுகள் கழித்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆட்சிப் பொறுப்பை தமிழ்நாட்டு மக்கள் வழங்கி இருக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாம் நாள்தோறும் ஓயாமல் உழைக்க வேண்டியிருக்கிறது. அந்த உழைப்பின் மூலமாக நிறைவேற்றப்படுகின்ற திட்டங்கள் கடைசி குக்கிராமம் வரை ஒவ்வொருவரையும் போய்ச் சரியாகச் சேர வேண்டும் என்ற அக்கறையுடன் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

விளக்கம்
இந்த நிலையில் நம்முடைய கழகத்தின் நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கட்சி நிகழ்ச்சிகளிலும் அல்லது பொது நிகழ்ச்சிகளிலும் பேசக்கூடிய செய்திகளைத் திரித்து, மறைத்து, வெட்டி - ஒட்டி, மோசடி செய்து வெளியிடக்கூடிய கூட்டத்தின் செயல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனை அந்த நச்சு சக்திகள் ஒரு தொடர் வேலையாகவே மேற்கொண்டு செய்து வருகின்றன.
"மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது" என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார். அதுபோல இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம், நேர்மை என்பது துளியும் இல்லாத நிலையில் அவர்களுடன் நாம் தொடர்ந்து மல்லுக்கட்டி போராடிவர வேண்டிய அவல நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எந்த வகையிலாவது தமிழ்நாட்டில் காலூன்றி விடவேண்டும் என நினைக்கின்ற மதவெறி நச்சு சக்திகள் இதுபோன்ற சூழல்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களை வளர்த்துக் கொள்ள முடியுமா என்று எதிர்பார்க்கின்றன.

வெற்று அகப்பைகள்
மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கி, கலகம் விளைவிக்க பார்க்கின்றன. அதற்காகக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுகளை வெட்டியும் ஒட்டியும், குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் தவறான பொருள்படும்படியான வாசகங்களுடன் வெளியிட்டு, அவற்றைத் தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். நம்முடைய பயணம் நெடியது. நமக்குப் பொறுப்பு அதிகமாக இருக்கிறது. பேரறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி சொல்வதுபோல அவர்கள் வெற்று அகப்பைகள். அதனால் வேகமாகச் சுழல்கிறார்கள். நாம் கையில் ஆட்சி - மக்கள் நலன் எனும் அரிசியும் பருப்பும் கொண்ட அகப்பையை வைத்திருக்கிறோம். ஆட்சிப் பொறுப்பு என்கின்ற அந்த அகப்பையைக் கவனமாகக் கையாள வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம் என நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
சேற்றில் மூழ்கி எழுந்து வரும் உருவம் ஒன்று தன் உடலைச் சிலுப்புகிறது என்று, ஆற்றில் நீராடி வரும் நாமும் அதன் முன்பு சிலுப்பிக் கொண்டிருக்க முடியாது. நாம் சற்று ஒதுங்கிப் போய் நம்முடைய பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. எனவே இத்தகைய நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் நாம் கவனமுடன் செயல்படுவோம். பொறுப்புடன் நடப்போம். நம்முடைய திட்டங்களைச் செயல்படுத்தி வருவோம். அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்போம். அவை பற்றி நாம் பேசுவதைவிட, பயன்பெற்ற மக்கள் பேசுவார்கள். அவர்களே இந்த நச்சு சக்திகளுக்குத் தக்க பதிலடி கொடுப்பார்கள். அந்தப் பொறுப்பை உணர்ந்து நம் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்வோம்.
-
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி












Click it and Unblock the Notifications