சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயிச்சது ஓபிஎஸ்சா, எடப்பாடியா.. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. அதிமுக தீர்ப்பில் 6 குழப்பங்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக் குழு தொடர்பான ஓபிஎஸ் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் சில நடைமுறை குழப்பங்கள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக உள்ளது.

இந்த தீர்ப்பில் நீதிபதி ஜெயசந்திரன் கூறுகையில் ஜூலை 11 ஆம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக் குழு செல்லாது. ஜூன் 23 ஆம் தேதி முன்பு என்ன நிலை இருந்ததோ அதே நிலை நீடிக்க வேண்டும். பொதுக் குழுவை ஆண்டுக்கு ஒரு முறைதான் கூட்ட வேண்டும்.

அதிமுக பொதுக்குழுவை யார் எப்போது கூட்டுவது? மீண்டும் எப்போது கூடும்? ஹைகோர்ட் தீர்ப்பு சொல்வது என்ன? அதிமுக பொதுக்குழுவை யார் எப்போது கூட்டுவது? மீண்டும் எப்போது கூடும்? ஹைகோர்ட் தீர்ப்பு சொல்வது என்ன?

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைந்து பொதுக் குழுவை கூட்ட வேண்டும். 5 இல் ஒரு பங்கு பொதுக் குழு உறுப்பினர்கள் கேட்டால் பொதுக் குழுவை இருவரும் கூட்ட வேண்டும். ஒரு வேளை இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடி ஆணையரை நியமிக்கலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

குழப்பங்கள்

குழப்பங்கள்

இந்த தீர்ப்பில் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதை கோர்ட் தெளிவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 1. ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்றால் எந்த நிலை என்ற கேள்வி வருகிறது. அதாவது ஜூன் 14 ஆம் தேதி முதலே ஒற்றை தலைமை விவகாரம் ஓங்கியது. ஓபிஎஸ்- எடப்பாடி பழனிசாமி இடையே பெரும் விரிசல் ஏற்பட்டிருந்தது.

என்ன குழப்பம்

என்ன குழப்பம்


2. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து பொதுக் குழுவை கூட்டலாம் என்றால், எடப்பாடி தரப்பு சமாதானமாக செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 3. பொதுக் குழுவை ஆண்டுக்கு ஒரு முறைதான் கூட்ட வேண்டும் என கோர்ட் நிர்பந்திக்க முடியாது. அதிமுக உள்கட்சியில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் பொதுக் குழுவை கூட்டிதானே ஆக வேண்டும்.

அலுவலக சாவி

அலுவலக சாவி

4. அதிமுக அலுவலக சாவி எடப்பாடி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது குறித்து தீர்ப்பில் எதுவும் சொல்லவில்லை. எனினும் இந்த வழக்கு தொடர்பாக நாளை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது. 5. அதிமுக வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை வங்கிகள் எடப்பாடி தரப்புக்கு கொடுத்தது என்னவாகும்?

Recommended Video

    ADMK-வில் தனிநபர் சர்வாதிகாரம் நடக்காது - OPS *Politics
    குடைச்சல்

    குடைச்சல்

    6. 5 இல் ஒரு பங்கு பொதுக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும். இதில் யாராவது ஒருவர் உடன்படாவிட்டால் மற்றொருவர் நீதிமன்றத்தை நாடலாம் என்றால் இந்த விவகாரத்தில் ஒருவருக்கொருவர் குடைச்சல் கொடுக்க அவ்வப்போது நீதிமன்றத்தை நாட வாய்ப்பிருக்கிறது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கேள்வியாக இருக்கிறது.

    English summary
    Here are the 6 confusions in the AIADMK General body meeting verdict. What are they?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X