மோடியை வீட்டிற்கு அனுப்பணும்.. ஸ்டாலின் சொன்ன 7 திடமான திட்டம்.. புட்டு புட்டு வைத்த பிரபல புள்ளி!
சென்னை: பாட்னாவில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி மாபெரும் ஆலோசனை கூட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் குமார் பேட்டி அளித்துள்ளார்.
தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. கடந்த வாரம் பாட்னாவில் பாஜகவிற்கு எதிராக 15 எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை செய்தன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.
இந்த கூட்டத்தில் திமுக கட்சி முக்கியமான 7 ஐடியாக்களை கொடுத்தது. அதன்படி 1) ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக உள்ள ஒரு கட்சியின் தலைமையில் மாநில வாரியாக கூட்டணி அமைக்கலாம். 2) அது சாத்தியமில்லை என்றால், நேரடிக் கூட்டணி இல்லாமலேயே சீட்-பகிர்வு ஏற்பாடு செய்யலாம்.

3) இரண்டும் சாத்தியமில்லை என்றால், ஒரு பொது வேட்பாளரை அறிவிக்கலாம். 4) தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சரியான முடிவாக இருக்காது. 5) அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே பொதுவான குறைந்தபட்ச தேர்தல் பிளான் வகுக்கப்பட வேண்டும்.
6) கட்சிகளுக்கு இடையே எழக்கூடிய ஏதேனும் பிரச்சனைகளை தீர்க்க, ஒரு நடவடிக்கை குழு அமைக்கப்படும். 7) பிரதமர் வேட்பாளர் குறித்து இப்போது முடிவு எடுக்க வேண்டியது இல்லை, என்பது உள்ளிட்ட ஐடியாக்களை திமுக கொடுத்துள்ளது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் குமார் பேட்டி அளித்துள்ளார். ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், எதிர்க்கட்சிகள் இப்போது ஒன்று கூடி உள்ளன. இதில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய காரணம் இல்லை. மோடி வர வேண்டாம் என்றுதான் இந்த கட்சிகள் கூடி உள்ளனர்.
அதுவே போதும். மோடியை எதிர்த்தால் போதும். அவருக்கு எதிராக வேறு ஒரு நபரை முன்னிறுத்த வேண்டிய அவசியம் கிடையாது. மோடிக்கு வடஇந்தியாவில் பெரிய ஆதரவு உள்ளது. அதை வீழ்த்த வேண்டும் என்றுதான் இவர்கள் எல்லோரும் ஒன்று கூடி உள்ளனர். ஆட்சியை பிடிக்க பாஜக என்ன வேண்டுமென்றாலும் செய்யும்.
ஆனால் அதை எல்லாம் தடுக்க வேண்டும் என்றுதான் பாஜகவிற்கு எதிராக 15 எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை செய்தன. நமக்கு இடையே பிரச்சனை இருக்கலாம். ஆனால் அந்த சின்ன பிரச்சனைக்காக மோடியை எதிர்க்காமல் இருக்க கூடாது. மோடியை எதிர்க்க வேண்டும் என்றால் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். யார் ஆள வேண்டும் என்பது பிரச்சனை இல்லை. யார் ஆள கூடாது என்பதுதான் பிரச்சனையே.

அதனால்தான் இவர்கள் எல்லோரும் ஒரே புள்ளியில் ஒன்று சேர்ந்து உள்ளனர். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கவில்லையா? அப்படித்தான் இதுவும். இவர்கள் இங்கே சேர முடியும் என்றால் தேசிய அளவிலும் சேர முடியும். கட்சி இருக்க வேண்டும் என்றால் பாஜகவிற்கு எதிராக எல்லோரும் ஒன்று கூட வேண்டும்.
மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றுதான் இவர்கள் ஒன்று கூடுகிறார்கள். இந்த கூட்டத்தில் மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றுதான் திமுக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் ஆலோசனை செய்துள்ளன என்று மூத்த பத்திரிகையாளர் குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications