Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரிய ஆதாரம் இருக்கு.. செந்தில் பாலாஜி காலை சுற்றிய 9 கன்னிவெடிகள்! அமலாக்கத்துறை ஹாப்பி? என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை முக்கியமான பல வாதங்களை வைத்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளனர். இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்று நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கி உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்றது இல்லை என்று நீதிபதி பரத் சக்கரவர்த்தி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

What are the 9 arguments said by the Enforcement Directorate argument Senthil Balaji ?

இரண்டு நீதிபதிகள் மாறி மாறி தீர்ப்பு வழங்கிய நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு எதிரான வழக்கு தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக விசாரணை செய்யப்பட்டு வந்தது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி மனைவி சார்பாக வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ ஆஜராகி வாதம் வைத்தார்.

அமலாக்கத் துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் வைத்தார். அதில், அவர் முக்கியமான சில பாயிண்டுகளை வைத்தார். அவர் வைத்த பாயிண்டுகள் பின்வருமாறு..

1. ரிமாண்ட் உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. மாறாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இப்படி ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட பின் மனுதாரர் ஹேபியஸ் கார்பஸ் மனுவை எப்படி போட முடியும். ஒரு நீதிபதி ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் கொடுத்துவிட்டார்.

2. நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனு கேட்டு இவர்கள் மனு தாக்கல் செய்துவிட்டனர். மனுதாரர் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது, ​​அவர் காவலை ஏற்றுக்கொண்டார் என்று அர்த்தம். அவர் காவலை ஏற்றுக்கொண்ட நிலையில் எப்படி இப்போது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியும்.

3. ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முகாந்திரம் எங்கே உள்ளது. காவலில் வைத்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோர முடியாது என்பதால் விசாரணை நீதிமன்றத்தை அதிகாரிகள் நாடினர். மருத்துவமனை மாற்றம் தொடர்பாக இடைக்கால உத்தரவை நாங்கள் பிறப்பித்தபோது ஏன் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டுமென கேட்கவில்லை

4. கைது செய்து ஆஜர்படுத்திய நீதிமன்றத்தில் தான் முதலில் கேட்க முடியும். அதனால் அங்கு கேட்டோம், 8 நாட்கள் எங்களுக்கு காவல் வழங்கப்பட்டன. ஆனால் அந்த நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி விசாரிக்க முடியவில்லை.

5. காவலில் வைத்து விசாரிக்க அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிப்பது இயலாத காரியம் ஆகிவிட்டது. அதனால் அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தை நாடியது.

6. சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய உத்தரவில் அவர் நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரப்படும். முதல் 15 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க கோர முடியும். அந்த அடிப்படையில் காவலில் வைத்து விசாரிக்க கோரினோம். இல்லாவிட்டால் அமலாக்கப் பிரிவு தனது கடமையை செய்ய தவறியதாகி விடும்.

7. நாங்கள் ஆதாரம் எல்லாம் இல்லாமல் கைது செய்யவில்லை. உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் கைது செய்த அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி வேலைக்கு பணம் பெற்றார் என்பதற்கான ஆதாரம் உள்ளது. அதன் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டார்.

8. கைது செய்த 10 மணி நேரத்துக்குள் கைது குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்பட்டது; கைதுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது; ஆனால் செந்தில் பாலாஜி அதைப் பெற மறுத்து விட்டார்.

9. கைது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதற்கும், கைதுக்கான காரணங்களை தெரிவித்த ஆவணத்தை செந்தில் பாலாஜி பெற மறுத்ததற்கான ஆதாரங்களும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. கைதின் போது செந்தில் பாலாஜிக்கு சட்ட உதவிகள் கிடைத்தன. அப்போது மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ உடனிருந்தார், என்று வாதம் வைத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+