அம்மாடி.. எவ்வளவு கோடி.. "மியா கலீபா"விடம் இத்தனை சொகுசு கார்கள் இருக்கா! தலையே சுத்துதே!
சென்னை: பிரபல 18+ நடிகை மியா கலீபா பயன்படுத்தும் கார்களின் விலைகளை கேட்டால் ஒரு நிமிஷம் உங்களுக்கு தலையே சுத்திடும் மக்களே!
18+ திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை மியா கலீபா. இப்போது 18+ படங்களில் நடிப்பது இல்லை என்றாலும், இவர் நடித்த சில படங்களே இவருக்கு உலகம் முழுக்க புகழை தேடிக்கொடுத்தது.
லெபனானில் பிறந்து பின்னர் அமெரிக்காவில் வளர்ந்தவர் 2014ல் அடல்ட் படங்களில் நடிக்க தொடங்கினார். வெறும் இரண்டு மாதங்களிலேயே இவர் உலகம் முழுக்க இந்த படங்கள் மூலம் பிரபலம் அடைந்தார்.

மாடலிங்:
மாடலில் துறையில் இருந்து.. பின்னர் பார் டெண்டர்.. பின்னர் சில நாட்கள் வேலையின்றி கஷ்டப்பட்டது.. அதன்பின் அடல்ட் படங்களில் நடித்து என்று இவரின் வாழ்க்கையே சுவாரசியம் நிறைந்தது ஆகும். வெறும் 29 வயதில் இவரின் சொத்து மதிப்பு 35 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பல வீடுகள், நிலங்களில் முதலீடு செய்து இருக்கும் இவர்.. மிகப்பெரிய கார் பிரியர். கார்களை ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர்.. சொந்தமாக பல சொகுசு கார்களை வாங்கி இருக்கிறார்.

லெக்சஸ்
இவர் வைத்துள்ள கார்கள் குறித்து இங்கே பார்க்கலாம். சமீபத்தில் விக்ரம் பட வெற்றிக்காக நடிகர் கமல் ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் கார் வாங்கிக்கொடுத்தார். அதே Lexus காரின் Lexus ES மாடல் காரை மியா கலீபாவும் வைத்து இருக்கிறார், இதன் மதிப்பு 30,95,700 ரூபாய் ஆகும். இது 2.5 லிட்டர் கொண்ட L4 சிலிண்டர் வகை எஞ்சின் கொண்டது ஆகும். 214 ஹார்ஸ் பவர் கொண்டது. அதிகபட்சம் 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடியது.

பிஎம்டபிள்யூ எம்4
அதேபோல் இவர் பிஎம்டபிள்யூ எம்4 கார் ஒன்றை வைத்து இருக்கிறார். இதன் மதிப்பு 53,65, 106 ரூபாய் ஆகும். இது 4 லிட்டர் கொண்ட L4 சிலிண்டர் வகை எஞ்சின் கொண்டது ஆகும். 503 ஹார்ஸ் பவர் கொண்டது. அதிகபட்சம் 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடியது. 0-100 கிமீ வேகத்தை இந்த கார் வெறும் 4 நொடிகளில் எட்டும் திறன் கொண்டது. இந்த காரை சமீபத்தில் அவர் வாங்கினார்.

ஜீப் வ்ராங்லர்
அதேபோல் இவர் ஜீப் வ்ராங்லர் காரை வைத்து இருக்கிறார். இதன் மதிப்பு 24,051,81 ரூபாய் ஆகும். இது 3.2 லிட்டர் கொண்ட சிலிண்டர் வகை எஞ்சின் கொண்டது ஆகும். 268 ஹார்ஸ் பவர் கொண்டது. அதிகபட்சம் 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடியது. 0-100 கிமீ வேகத்தை இந்த கார் வெறும் 7.6 நொடிகளில் எட்டும் திறன் கொண்டது. ஆப் ரோட் கார்களில் இது அதிக திறன் கொண்டது ஆகும்.

ஃபெராரி F12 பெர்லிநெட்டா
ஃபெராரி F12 பெர்லிநெட்டா காரை சமீபத்தில் மியா கலீபா வாங்கினார். இதன் மதிப்பு 2,48,27,292 ரூபாய் ஆகும். அவர் வைத்திருக்கும் காரிலேயே இதுதான் மிக அதிக விலை கொண்ட கார் ஆகும். . இது 6.2 லிட்டர் கொண்ட சிலிண்டர் வகை எஞ்சின் கொண்டது ஆகும். 730 ஹார்ஸ் பவர் கொண்டது. அதிகபட்சம் 340 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடியது. 0-100 கிமீ வேகத்தை இந்த கார் வெறும் 3 நொடிகளில் எட்டும் திறன் கொண்டது.

பெண்ட்லி கான்டினென்டல் ஜிடி
பெண்ட்லி கான்டினென்டல் ஜிடி காருடன் மியா கலீபா இருக்கும் புகைப்படங்கள் பல இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. இந்த காரின் மதிப்பு 1,72,30,797 ரூபாய் ஆகும். . இது 4 லிட்டர் கொண்ட இரட்டை L4 சிலிண்டர் வகை எஞ்சின் கொண்டது ஆகும். 301 ஹார்ஸ் பவர் கொண்டது. அதிகபட்சம் 301 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடியது. 0-100 கிமீ வேகத்தை இந்த கார் வெறும் 3.8 நொடிகளில் எட்டும் திறன் கொண்டது.

அவ்டி ஆர்8 ஸ்பைடர்
மியா கலீபா பயன்படுத்தும் பிரபலமான கார்களில் ஒன்று அவ்டி ஆர்8 ஸ்பைடர் ஆகும். இதன் மதிப்பு 1,20,18,148 ரூபாய் ஆகும். இது 5 லிட்டர் கொண்ட இரட்டை V10 சிலிண்டர் வகை எஞ்சின் கொண்டது ஆகும். 602 ஹார்ஸ் பவர் கொண்டது. அதிகபட்சம் 330 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடியது. 0-100 கிமீ வேகத்தை இந்த கார் வெறும் 3 நொடிகளில் எட்டும் திறன் கொண்டது. மொத்தமாக இவர் வைத்திருக்கும் கார்களின் மதிப்பு, 6.3 கோடி ரூபாய ஆகும்.












Click it and Unblock the Notifications