ஆளுநர் டூ ஆதீனம்.. ஏகப்பட்ட சவால்கள்.. எதிர்பார்க்காத சறுக்கல்கள்.. திமுகவின் 1 வருட ஆட்சி ரிப்போர்ட்!
சென்னை: தமிழ்நாடு முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றோடு 1 ஆண்டு நிறைவு பெறுகிறது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்று 1 வருடம் ஓடிவிட்டது.
இந்த வருடத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிதி உதவி, இன்ஜினியரிங் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேறியது, பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் என்று ஆளும் திமுக பல சாதனைகளை செய்துள்ளது.
1 வருட ஆட்சியில் ஆளும் திமுக அரசு பல சாதனைகளை செய்து இருந்தாலும்.. சில சறுக்கல்களையும்.. பல சவால்களையும் சந்தித்து இருக்கிறது. சில எதிர்பார்க்காத சவால்கள் அரசுக்கு பல்வேறு பக்கங்களில் இருந்து வந்தது.. அவை என்னென்ன என்று பார்க்கலாம்!

தேர்தல் அறிக்கை
ஆளும் திமுக தரப்பு எதிர்கொண்டு இருக்கும் முக்கியமான விமர்சனம் என்றால் அது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான். திமுக அரசு பெட்ரோல் விலையை குறைத்தாலும் டீசல் விலையை இன்னும் குறைக்கவில்லை. மாநில அரசு இனியும் வரியை குறைக்க முடியாது. மத்திய அரசுதான் வரியை ஏற்றியது. அவர்கள்தான் குறைக்க வேண்டும் என்று திமுக கூறி வருகிறது. இருந்தாலும் 5 ரூபாய் வரை விலை குறைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. 3 ரூபாய் மட்டுமே பெட்ரோல் குறைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு நிதி
அது இன்னும் செய்யப்படவில்லை. அதேபோல் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாடு அரசு இதற்கு மோசமான நிதிநிலையை காரணம் காட்டி உள்ளது. போதிய நிதி இல்லை. விரைவில் இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவோம் என்று அரசு கூறி உள்ளது. ஆனாலும் திமுக வாக்குறுதியை நிறைவேற்ற மறந்துவிட்டதாக ஆளும் திமுகவிற்கு எதிராக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைத்துள்ளது.
Recommended Video

நிதி நிலை இன்னும் சரியவில்லை
அதேபோல் தமிழ்நாட்டில் பல சீர்திருத்தங்களை நிதித்துறையில் அரசு கொண்டு வந்து இருந்தாலும் இன்னும் பொருளாதாரம் சரியாகவில்லை. இதற்கு முன் ஏற்பட்ட பொருளாதார சரிவில் இருந்து இன்னும் தமிழ்நாடு மீளவில்லை. பல்வேறு வெளிநாட்டு முதலீடுகளை அரசு ஈர்த்து இருந்தாலும் இன்னும் முழுமையாக நிதிநிலை சரியாகவில்லை. ரகுராம் ராஜன் உள்ளிட்ட வல்லுனர்களை அரசு நியமித்து ஆலோசனைகளை பெற்றாலும், நிதி நிலை சரியாக இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 2022-23 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 52,781.17 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுநர் மோதல்
இது 2021-22 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் மதிப்பிடப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை தொகையான 55,272.79 கோடி ரூபாயைக் காட்டிலும் குறைவானதாகும். இது ஒரு அரசுக்கு சவாலாக இருந்த விஷயம் என்றால் அது ஆளுனருடன் நடந்த மோதல்கள்தான். வாக்குறுதி கொடுத்தபடியே நீட் மசோதாவை நிறைவேற்றி திமுக ஆளுநருக்கு அனுப்பியது. ஆனாலும் அதை ஏற்காமல் ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு இருந்தார். இப்போதுதான் ஆளுநர் ரவி இந்த மசோதாவை டெல்லிக்கு அனுப்பி உள்ளார்.

ஆளுநர் ரவி மோதல்
இதை இனி குடியரசுத் தலைவர் ஏற்க வேண்டும். இதனால் நீட் விலக்கு எவ்வளவு விரைவில் சாத்தியமாகும்.. அல்லது சாத்தியம் ஆகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போக துணை வேந்தர்களை ஆளுநர் சந்தித்தது. தருமபுரம் ஆதீனத்தை ஆளுநர் சந்தித்தது என்று பல விவகாரங்களில் ஆளுநர் ரவி முதல்வர் ஸ்டாலின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆளுநர் விவகாரமும், மோதலும் முதல்வர் ஸ்டாலினுக்கும், அரசுக்கும் கடும் சவாலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் சர்ச்சை
இந்த ஆட்சியில் அமைச்சர்கள் பெரிதாக சர்ச்சையில் சிக்கவில்லை என்றாலும், அமைச்சர் ராஜகண்ணப்பன் ஜாதி ரீதியான புகாருக்கு உள்ளானார். போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஒன்றிய நிர்வாகி ஒருவரை ஜாதி ரீதியாக திட்டியதாக எழுந்த புகாரை அடுத்து ராஜகண்ணப்பன் இப்படி மாற்றப்பட்டு இருக்கிறார்.
பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

நிற்காத கோர்ட் வழக்குகள்
இது போக பல்வேறு கோர்ட் வழக்குகளில் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. பேரறிவாளன் வழக்கு உள்ளிட்ட வழக்குகள் அரசுக்கு சாதகமாக சென்று கொண்டு இருக்கிறது. நீட் விலக்கு மசோதாவிற்கு எதிரான வழக்கிலும் அரசுக்கு சாதகமாகவே உத்தரவு வந்தது. ஆனால் கிஷோர் கே சாமி கைது, மாரிதாஸ் கைது போன்ற வழக்குகளில் உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்குகளில் அரசுக்கு எதிராக உத்தரவுகள் திரும்பின. இது போன்ற வழக்குகள் அரசுக்கு பெரிய சவாலாக இருந்தது.

தாலிக்கு தங்கம்
கல்லூரி கல்வி அளவில் மாணவிகள் சேரும் சதவிகிதம் குறைவாக உள்ளதாள் மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தைக் கொண்டு வரப்பட்டது. இதற்காக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது. இது நல்ல திட்டம் என்றாலும், மாணவிகளை கல்வி கற்க உதவும் என்றாலும்.. இதற்கு எதிர்ப்பும் ஒரு பக்கம் எழுந்தது. தங்கம் என்றால் தொடர்ந்து மதிப்பு உயரும். ஆனால் 1000 ரூபாய் மாதம் கொடுத்தால் மூன்று வருடத்திற்கு 40 ஆயிரம் கூட வராது என்று பொதுமக்கள் பலரும், எதிர்கட்சியினரும் விமர்சனங்களை வைத்தனர்.

மின்சார தட்டுப்பாடு
கடந்த 1 வருட ஆட்சியில் பெரிய அளவில் விமர்சனங்கள் இல்லை என்றாலும் கடந்த ஒரு மாதமாக மின்வெட்டு புகார்கள் அதிகரித்துள்ளன. இந்தியா முழுக்கவே மின்வெட்டு உள்ளது. வடமாநிலங்களில் 6 மணி நேரம் கூட மின்வெட்டு செய்யப்படுகிறது. இதை பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி பல முறை விளக்கம் கொடுத்துவிட்டார். என்றாலும் திமுக என்றாலே மின்வெட்டுதான் என்று விமர்சனங்கள் இணையத்தில் எழுந்துள்ளன. இந்த மின்வெட்டு விவகாரம் அரசுக்கு எதிராக பெரிதாக திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் மரணம்
சமீபத்தில் சென்னையில் போலீஸ் கஸ்டடியில் இருந்த விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் அடைந்தார். இதில் தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினும் இதை பற்றி சட்டசபையில் விளக்கி உள்ளார். அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும், போலீசார் அடித்து துன்புறுத்தியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்தார் என்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். பென்னிக்ஸ் ஜெயராஜ் கொலையை கடுமையாக விமர்சனம் செய்த திமுக ஆட்சியில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்று இருப்பது விமர்சனங்களை சந்தித்துள்ளது.

பள்ளிகள் நிலை
போலீஸ் கஸ்டடி மரணங்கள் அதிகரித்து வருகிறது. அரசுக்கு இது பெரிய பிரஷராக உருவெடுத்துள்ளது. காவல்துறையில் ஆக்கபூர்வமான மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க.. பள்ளிகளில் ஆசியர்களுக்கு எதிராக மீ டு புகார், பாலியல் குற்றங்கள், சாதி கயிறால் செய்யப்பட்ட கொலைகள், மாணவர்கள் ஆசிரியர்களை தாக்குவது போன்ற புகார்களும் பள்ளிக்கல்வித்துறைக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.

தற்போது புதிய சவால்
தருமபுரம் ஆதீனத்திற்கு பல்லக்கு தூக்கும் விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை பல இந்து அமைப்புகள் எதிர்த்துள்ளன. இதில் அரசுக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகள் கடும் அழுத்தங்களை கொடுத்து வருகின்றன. இதில் அரசு என்ன முடிவு எடுக்க போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே அயோத்தி மண்டப விவகாரத்தில் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில், இந்த விவகாரமும் ஆளும் திமுகவிற்கு பெரிய சவாலாக உருவெடுத்து உள்ளது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications