ரூ.6000 நிவாரணத்திற்கான டோக்கனில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் என்ன? சென்னை மக்கள் அறிய வேண்டியவை
சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரண தொகை வழங்கல் டோக்கனில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் என்னென் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் நாளை முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 2023 டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய நிலங்களில் வீசிய மிகஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் அதிகமழை பெய்தது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6000/ வழங்கப்படும் என்று அறிவித்தார் .
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழக்குவது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிர்வாக ஆணைபர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் முன்மொழிவுகளை அனுப்பினார். அதன்படி தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புயல் மற்றும் அதிகனமழை காரணமாக சில பகுதிகளில் ATM மையங்கள் இயங்காததாலும், பயனாளர்களின் வங்கிக் கணக்கு எண்களை சேகரித்து நிவாரணம் வழங்க காலதாமதம் ஆகும் என்பதாலும், மேலும் பாதிக்கப்பட்ட பலர் தங்களது ATM அட்டை. வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை இழந்திருக்கக்கூடும் என்பதாலும், அவர்களுக்கு உடனடியாக பயனளிக்கும் வகையில் நிவாரணத்தொகை ரொக்கமாக வழங்கலாம் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட/ இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள்/ பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்கு (மேலே பத்தி-3ல் குறிப்பிட்டுள்ள வட்டங்கள்/ வருவாய் கிராமங்கள்) நியாயவிலைக் கடைகள் மூலமாக டோக்கன் வழங்கும் முறையை பின்பற்றி ரூ.6000/- (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த மழை வெள்ளத்தால் மத்திய, மாநில அரசு/ மற்ற பொதுத்துறை நிறுவன உயர் அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் தங்கள்து வாழ்வாதாரம் பாதிபபு, துணி, பாத்திரங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், பாதிப்பு விவரங்களை தங்களது வங்கி கணக்கு விவரத்துடன் தங்கள் பாதிப்புக்குரிய நியாயவிலை கடைகளில் விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, அதனடிப்படையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் அவர்களின் வங்கி கணக்கில் அனுப்பி வைக்கப்படும். இதற்கு தேவையான அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்ட்ட நியாய விலைக்கடைகளில் தேவையான அளவு அமைத்திட கூட்டுறவு சங்ககிளின் பதிவவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அரசு தெரிவித்துள்ளது.
6000 வழங்கப்பட உள்ள பகுதிகளின் விவரம்:
சென்னை மாவட்டம்: அனைத்து வட்டங்கள்:
(ஆ) செங்கல்பட்டு மாவட்டம்: தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும், மற்றும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்:
(இ) காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும். ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்கள்:
(ஈ) திருவள்ளூர் மாவட்டம்: (1) பொன்னேரி (2) கும்மிடிப்பூண்டி, (3)ஆவடி, (4) பூவிருந்தவல்லி (5) ஊத்துக்கோட்டை (6) திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்கள்.
மிக்ஜாம் புயல் நிவாரண தொகை வழங்கல் டோக்கனில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, கடையின் பெயர், குடும்ப அட்டைதாரர் பெயர், குடும்ப அட்டை எண், நாள் மற்றும் நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை முதல் ரூ.6000 நிவாரணம் வழங்கப்படுவதற்கான டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளது. கூட்டுறவு சங்கப்பதிவாளர், நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் நியாய விலைக்கடைகளில் விண்ணப்பங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நியாய விலைக்கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க காவல்துறையுடன் இணைந்து மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண்மை இயக்குநர் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications