“பானி பூரி”.. உங்களில் எத்தனை பேருக்கு பிடிக்கும்? அதற்கு இத்தனை பெயர்கள் இருப்பது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நம்மில் பலரால் விரும்பி உண்ணப்படும் பானி பூரி ஒவ்வொரு கடைகள் ஒவ்வொரு விதமான சுவை தருவதைபோல் ஒவ்வொரு மாநிலத்தில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. அந்த பெயர்கள் என்ன விரிவாக பார்ப்போம்.

பானி புரி என்பது பொதுவாக வட மாநில உணவு பொருளாக அறியப்பட்டாலும், தற்போதை பான் இந்தியா திரைப்படங்களைபோல், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே பான் இந்தியா படமாக மாறிவிட்டது. தமிழ்நாட்டில் சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே கிடைத்து வந்த பானி பூரி தற்போது தமிழ்நாட்டில் மூளை முடுக்குகளிலும் எளிதாக கிடைக்கிறது.

 What are the different names of our favourite dish Pani Puri?

சுவை சூப்பராக இருந்தாலும், அதன் பெயரில் எப்போதுமே ஒரு குழப்பம் இருக்கும். பானி என்ற தண்ணீர். பூரி என்றால் உடைத்து ஊற்றப்படும் வத்தல் போன்ற பொருள் என்பதால் பானி பூரி என அழைக்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் பானி பூரி என்றால் சில இடங்களில் பூரியை உடைத்து அதில் ரச தண்ணீர் ஊற்றித் தருவார்கள். மசாலா பூரி என்று தெளிவாக சொன்னால்தான், சுண்டல், மிக்சர், பொறி கொட்டி சால்னா உற்றி தருவார்கள்.

பானி பூரியிலும் பேல் பூரி, தயிர் பூரி, மசாலா பூரி, மயோனஸ் பூரி என பல வகைகள் உண்டு. ஆனால், பொதுவான பெயராக பானி பூரி என்று நாம் அழைக்கிறோம். தமிழ்நாட்டிலேயே இந்த நிலை என்றால் காலம் காலமாக இதை சாப்பிடும் வட மாநிலங்களில் அதை எப்படி அழைப்பார்கள் தெரியுமா? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

இந்தியாவின் பிரபலமான தெரு உணவுகளில் பானிபூரிக்கு முதலிடத்தை தாராளமாக கொடுக்கலாம். இது பலரின் இதயங்களில் சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. இது ஒரு சிற்றுண்டி மட்டுமின்றி, அதை ருசிப்பவர்களை மீண்டும் மீண்டும் சுவைக்க வைக்கும் வல்லமை கொண்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இங்கு இந்த சுவையான சிற்றுண்டியின் சில பிராந்திய பெயர்கள் உள்ளன.

 What are the different names of our favourite dish Pani Puri?

பானி புரி: இது இந்த உணவின் மிக பொதுவான பெயர். இது இந்தியாவின் பல பகுதிகளில், குறிப்பாக வட இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மொறுமொறுப்பான, சற்று காரமான வெற்று புரியில் சுவையூட்டப்பட்ட நீர், பல மசாலாப் பொருட்களுடன் சமைத்த பட்டாணி, மசித்த உருளைக் கிழங்கு, வெங்காயம் மற்றும் சட் மசாலா ஆகியவற்றால் நிரப்பப்பட்டு வழங்கப்படுகிறது.

கோல்கப்: 'கோல்கப்' என்பது வட இந்தியாவில், குறிப்பாக டெல்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புச்கா: கிழக்கு இந்தியாவில், குறிப்பாக மேற்கு வங்காளம், பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இது புச்கா என்று அழைக்கப்படுகிறது.

குப்சப்: ஒடிசாவின் சில பகுதிகளில் பானி பூரியை குப்சப் என்றே மக்கள் அழைக்கின்றனர்.

பானி கே பட்டாஷே: 'பனி கே பட்டாஷே' என்பது ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் பொதுவாகப் அழைக்கப்படும் பெயராக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+