ஓ காமராஜர் ஆட்சியை ஆட்சியாளர்கள் கூற இதுதான் காரணமா? 60 ஆண்டுகளாகியும் கம்பீரமாக நிற்கும் அணைகள்
சென்னை: முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் 9 அணைகள் கட்டப்பட்டன. இவை 60 ஆண்டுகளாகியும் இன்னமும் வலுவாக காட்சியளிக்கின்றன.
காமராஜரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் ஜூலை 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 121 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. கர்மவீரர் காமராஜர் என அழைக்கப்படுகிறார்.

குழந்தைகள் பசியுடன் பள்ளிக்கு வந்தால் படிக்க இயலாது என்பதால் மதிய உணவு திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இது போன்ற திட்டம் இல்லை. காமராஜர்தான் அந்த திட்டத்தின் முன்னோடியாவார். அது போல் காமராஜர் தனது ஆட்சிக் காலத்தில் கட்டிய அணைகளில் முக்கியமானது மலப்புழா அணை. 1955 ஆம் ஆண்டு பாலக்காடு தமிழகத்துடன் இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த காமராஜர் மலப்புழா அணையை கட்டினார்.
இந்த அணைதான் இன்றும் கேரள மக்களை மழை, வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கிறது. மலம்புழா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் உயரம் 6,066 அடியாகும். இது கேரளாவின் இரண்டாவது பெரிய ஆறான பாரதப்புழாவின் துணை ஆறான மலம்புழாவின் குறுக்கே கட்டப்பட்டது. இந்த அணையின் கட்டுமான பணி 1949 ஆம் ஆண்டு தொடங்கியது. 1955 இல்தான் முடிந்தது. இந்த அணையின் நீளம் 2,069 மீட்டர், உயரம் 115 மீட்டர், 2 கால்வாய்களை கொண்டது.
அப்போதைய பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த பக்தவச்சலம் மேற்பார்வையில் கட்டப்பட்டது. அது போல் விவசாயிகளின் வாழ்க்கை செழிக்க பல்வேறு அணைகளையும் காமராஜர் தனது ஆட்சிக்காலத்தில் கட்டியுள்ளார். தமிழகத்தில் விவசாயத்திற்காக தண்ணீரை தேக்கி வைக்கவே அணைகள் கட்டப்பட்டன. அதன் பிறகு அவை குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளில் மேட்டூர் அணை, கீழ்பவானி அணை, பாபநாசம், மணிமுத்தாறு, ஆழியாறு போன்றவை 100 அடி உயரத்திற்கும் அதிகமானது. மேட்டூர் அணையும் பாபநாசம் அணையும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டன. அமராவதி, ஆழியாறு, மணிமுத்தாறு, வைகை, கீழ்பவானி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், விடூர் உள்ளிட்ட அணைகள் 1954 ஆம் ஆண்டு முல் 1963 ஆம் ஆண்டு வரை காமராஜர் முதல்வராக இருந்த போது கட்டப்பட்டு அவரால் திறக்கப்பட்டவை. இவை அனைத்தும் 60 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.
அவர் காலத்தில் தொடங்கப்பட்ட நீர் மின் திட்டங்கங்கள் 1. 26 கோடி ரூபாயில் குடிநீர்மின் திட்டம், 2. 10 கோடி ரூபாயில் பெரியாறு மின்திட்டம், 3. 8 கோடி ரூபாயில் கும்பார் - அமராவதி மின் திட்டம், 4. 12 கோடி ரூபாய் செலவில், 75,000 கிலோ வாட் மின்சாரம் உபரியாகக் கிடைக்க வழி செய்த மேட்டூர் கீழ்நிலை நீர் செல்வழித் திட்டம் போன்றவைகளாகும். இத்தகைய நல்லாட்சியை கொடுத்தால்தான் அவருக்கு பின்னால் அரசியலுக்கு வருவோர் காமராஜர் ஆட்சியை தருவோம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications