இந்த பிரபலம் வேற "3"ன்னு சொல்றாரே.. எங்கே போய் முடியுமோ.. திமுகவில் இப்பவே கண்ணை கட்டுதே.. ஆண்டவரே
சென்னை: தமுக - காங்கிரஸ் கூட்டணியில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்த சில தகவல்கள் கசிந்து வருகின்றன.
எம்பி தேர்தல் விரைவில் வரப்போகிறது.. இதனால் அரசியல் கட்சிகள் மும்முரமாகி வருகின்றன.. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யமும் தேர்தலுக்கு தயாராக வருகிறது. இந்த முறை கூட்டணி வைத்துதான் போட்டியிட வேண்டும் என்பதில் கமல் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.

உறுதிப்பாடு: அந்தவகையில், கமலுக்கு மட்டும் ஒரு இடம் ஒதுக்குவதற்கு, திமுக கூட்டணியில் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், எப்படியாவது 3 இடங்களை, திமுக மேலிடம் கேட்டு பெற்று விட வேண்டும் என்பதிலும் மய்யத்தினர் உறுதியாக இருக்கிறார்களாம்.. சமீபத்தில்கூட, மநீம ஆலோசனை கூட்டம் நடந்து முடிந்தது..
அப்போது, கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். தேர்தல் பணிகளை நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி அமைக்க வேண்டும் கட்சியில் செயல்படாத நிர்வாகிகளை நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்றெல்லாம் கூறியதாக தெரிகிறது.
சிந்தனைகள்: கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, மநீம துணைத் தலைவர் மவுரியா, "தலைவர் கமல்ஹாசன் கொள்கை, சிந்தனைகளுடன் ஒத்த கருத்து உடைய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமையும்.. இல்லாவிட்டால் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதற்கு தயங்க மாட்டோம் என்று கூறியிருந்தார்.
அப்படியானால் மக்கள் நீதி மய்யம் என்ன முடிவில் இருக்கிறது? திமுகவுடன் கூட்டணி வைக்க போகிறதா? இல்லையா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறி வருகின்றன.
எத்தனை தொகுதிகள்: திமுக கூட்டணியை பொறுத்தவரை, மய்யத்துக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்குவது என்பது இன்னும் முடிவாகவில்லையாம். ஆனால், கமலுக்கு ஒரு இடம் மட்டுமே ஒதுக்கப்பட இருப்பதாக சொல்கிறார்கள்.. ஆனால், மய்யம் தரப்பிலோ 3 சீட்டுகள் என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம்.
காரணம், திமுக கூட்டணியில், மய்யமும் சேர்ந்து பயணிக்கும்போது கூட்டணிக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கும்... அதுமட்டுமல்லாமல், தேசத்தின் பிரபலமான நபர் என்பதால், கமல்ஹாசனின் பிரச்சாரம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை கூட்டணிக்கு நிச்சயம் கைக்கொடுக்கும்... மக்களிடம் கமலுக்கு ஏற்கனவே நிறைய பரிச்சயம் உள்ளது.. கமலின் பேச்சை கேட்பதற்கென்றே மக்கள் அதிகம் திரளுவார்கள்.
வாக்கு வங்கி: மேலும், இதுவரை சந்தித்த தேர்தல்களிலும் வாக்கு வங்கியை ஓரளவு நிரூபித்துள்ளாலேயே 3 தொகுதிகளை கேட்டு வருகிறார்களாம். ஒரு சீட் மட்டும் கொடுத்தால் அதனை ஏற்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார்களாம். இப்படி பலவிதமான யூகங்கள் வட்டமடித்தாலும், கமல் எப்படியும் 3 சீட்டுகளை கேட்டு வாங்கிவிடுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் மய்யத்தினர்.
அப்படி 3 இடங்கள் ஒதுக்கும் பட்சத்தில், கோவை, மதுரை, தென்சென்னையை கேட்கவும் திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. கடந்த முறை போலவே, இந்த முறையும் கோவை தொகுதியில் போட்டியிடவே கமல் விரும்புவதாக தெரிகிறது. மதுரை மற்றும் தென்சென்னை என மொத்தம் 3 தொகுதியையும் மய்யம் சார்பில் கேட்பதாக தெரிகிறது.
1 சீட்: இதில், கோவை, மதுரை இரண்டுமே, திமுக கூட்டணியிலுள்ள கம்யூனிஸ்ட்கள் வசம் உள்ளதால், கமலுக்கு அவைகளை தர வாய்ப்பில்லை என்கிறார்கள். ஆக, தென்சென்னை மட்டுமே திமுக தரப்பில் ஒதுக்கலாம் என்கிறார்கள். 1 சீட் மட்டுமே தந்தால் மய்யம் தனித்து போட்டியிடுமா மய்யம்? அல்லது மய்யம் தலைமையில் புது கூட்டணி அமையுமா? தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.!!












Click it and Unblock the Notifications