ரேஷன் அட்டைதாரர்களே.. புது ரேஷன் கார்டுகள் எப்போது கிடைக்கும்? ரேஷன் கார்டு தொலைஞ்சிருச்சா? ஈஸி வழி
சென்னை: புதிதாக விண்ணப்பித்திருப்பவர்களுக்கு ரேஷன் கார்டுகள் எப்போது வழங்கப்படுகின்றன தெரியுமா? உங்களது ரேஷன் கார்டுகள் தொலைந்துவிட்டால் அதை எப்படி ஆன்லைனில் மீண்டும் பெறுவது தெரியுமா?
அரசு தரப்பிலிருந்து, மானியம் கிடைக்க வேண்டும் என்றாலோ, அல்லது நலத்திட்ட உதவிகள், பொங்கல் பரிசு தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை போன்ற உதவிகள் கிடைக்க வேண்டும் என்றாலோ, அதற்கு ரேஷன் அட்டைகளை வைத்திருப்பது அவசியம். ரேஷன் கார்டு இல்லாவிட்டால், அரசின் எந்தவகையான சலுகைகளையும் நம்மால் பெற முடியாது.

சலுகைகள்: ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் சலுகைகளை பெறமுடியும்... மேலும், ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும்.. காரணம், இதனால் மோசடிகளை வெகுவாக தடுக்க முடியும்.
3 கோடி குடும்ப ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன.. கடந்த மே 2021 முதல் இப்போதுவரை 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது. தற்போது, மேலும், புதிய ரேஷன் கார்டுகள் கேட்டும், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க துவங்கிவிட்டனர்..
புதிய கார்டுகள்: இப்படி புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தால், தனி சமையல் அறையுடன் வசிப்போருக்கு, விண்ணப்பித்த 30 நாட்களுக்குள், புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்பது அடிப்படையான விஷயம்.
ஆனால், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துவதை ஒட்டி, கடந்த வருடம் ஜூன் மாதம் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தப்பட்டதால், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 7 மாதங்களில் 5000 முதல் 8000 ரேஷன் கார்டுக்கான விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
அச்சிடும் பணிகள்: புதிய ரேஷன் கார்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாமலும், அச்சிடும் பணிகளும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டும் உள்ளதால் தமிழகம் முழுவதும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளனர்...
விரைவில் எம்பி தேர்தல் நடைபெற உள்ளது.. ஆனால், தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால் புதிய ரேஷன் கார்டுகளை அச்சடிக்க முடியாது என்கிறார்கள்.. எனவே, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோர் மேலும் 6 மாதங்களுக்கு ரேஷன் கார்டை பெற முடியாத நிலை ஏற்படும். எனவே புதிய ரேஷன் கார்டுகளை வழங்கும் பணிகளை உடனடியாக தொடங்க அரசு உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
விண்ணப்பம்: 2 நாட்களுக்கு முன்பு, கார்டின் 2024ம் ஆண்டிற்கான புதிய ரேஷன் கார்டுக்கு தேர்வு செய்யப்பட்ட தகுதியான நபர்களின் பட்டியலானது வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி, விண்ணப்பித்தவர்கள் உடனே தங்களுடைய பெயர் பட்டியலை சரிபார்க்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துவிட்டாலும், கார்டுகள் கிடைப்பது எளிது கிடையாது.. உங்களது ரேஷன் கார்டுகள் அப்ளை செய்த பிறகு, முறைப்படி அரசு அதிகாரிகள் வீட்டுக்ககே வந்து தகவல்களை, இருப்பிடங்களை உறுதி செய்வார்கள்.. அதற்கு பிறகுதான் ரேஷன் அட்டை வழங்குவார்கள். இதற்கு எப்படிம் 3 - 5 மாதங்கள் வரை கூட எடுக்கலாம். சில சமயங்களில் சரியான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் விண்ணப்பங்கள் ரிஜக்ட் ஆகவும் வாய்ப்புகள் உண்டு.
கார்டுகள்: இவ்வளவு படிகளையும் தாண்டி நம்முடைய கையில் கிடைக்கும் ரேஷன் கார்டுகளை பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும். ஒருவேளை கார்டை தவறுதலாக தொலைத்து விட்டீர்களா? அதற்கும் ஆன்லைனிலேயே விண்ணப்பித்து புதிய ரேஷன் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும்.
- https://www.tnpds.gov.in/ என்ற தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று, உங்களது IDஐ பதிவிட வேண்டும்.
- இப்போது பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு OTP ஒன்று வரும்.. இதை ஸ்கிரீனில் பதிவு செய்து சுயவிவர பக்கத்திற்குள் நுழைய வேண்டும்.
- இப்போது TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கத்தை காண்பீர்கள்.. இதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பதிவு செய்து, அந்த காப்பியை PDF ஆக சேமிக்க வேண்டும். அல்லது டவுன்லோட் செய்துகொள்ள வேண்டும்.
- இந்த காப்பியை பிரிண்ட் எடுத்து, உங்கள் ரேஷன் அட்டைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால், உங்களுக்கு மறுபடியும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். இதற்கு சில நாட்கள் கால அவகாசம் ஆகலாம்.
இதற்கான கட்டணம் ரூ.20 மற்றும் தபால் சேவை கட்டணம் ரூ.25 ஆக மொத்தம் 45 ரூபாயை இணையவழியில் கியூ.ஆர். கோடு அல்லது நெட் பாங்கிங் வழியாக செலுத்தினால் புதிய ரேஷன் கார்டுகளை தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications