டைம் கொடுத்தாச்சு.. தூக்கி போட ரெடியாகும் ஸ்டாலின்? அமைச்சரவை மாற்றம்.. ஓ இதுதான் சீக்ரெட்டா?
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை கடந்த சில நாட்களாகவே பதற்றமாக காணப்பட்டு வருகிறது. எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவை மாற்றப்படலாம் என்று பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அதிலும் நேற்று முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அமைச்சர்கள் யாரும் பொதுவெளியில் தவறாக பேச கூடாது. பொது இடங்களில் பேசும் போது கவனமாக பேச வேண்டும், என்று அறிவுரை வழங்கினார்.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வலம் வர தொடங்கி உள்ளன.
தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முதல்வர் ஸ்டாலினின் ஒரு இலாக்காவையும் சேர்த்து மொத்தமாக 11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது. அதேபோல் சிறப்பு திட்ட செயலாக்கம் துறை வழங்கப்பட்டு உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனது மட்டுமின்றி பல சீனியர் அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டன. ஐ பெரியசாமி, ராஜகண்ணப்பன், முத்துசாமி, பெரியகருப்பன், சேகர் பாபு, ராமசந்திரன், காந்தி, பிடிஆர், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன.
விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யனாதன், சுற்றுசூழல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு அமலாக்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதே சமயம் டாப் இலாக்கா எதிலும் மாற்றம் செய்யப்படவில்லை. அமைச்சர்கள் துரைமுருகன், கே என் நேரு, அன்பில் மகேஷ், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, ஏவ வேலு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், ரகுபதி, செந்தில் பாலாஜி, மா சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகிய 11 அமைச்சர்களின் பதவிகளில் எந்த மாற்றமும் இல்லை.
அதன்பின் இப்போது மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், அமைச்சரவை மாற்றத்திற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இதில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மாற்ற வாய்ப்பு குறைவு. அவர் மீது கைவைக்க வாய்ப்பு இல்லை. அவர் முதல்வர் ஸ்டாலினுக்கும் நெருக்கம்.
அவர் மீது கை வைத்தால் கூட அவருக்கு வேறு பெரிய அமைச்சரவை கொடுப்பார். அவர் இப்போதே முக்கியமான துறையில்தான் இருக்கிறார். முதல்வருக்கு மிகவும் வேண்டியவர்.
அவரின் துறையில் சில குளறுபடிகள் உள்ளன. பலர் தேர்வு எழுதவில்லை. பள்ளிகளில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் அதற்காக அவர் மாற்றப்படுவார் என்பது சந்தேகம்தான். அவர் மாற்றப்பட வாய்ப்பு இல்லை.
அவரை மாற்றினாலும் அவருக்கு பெரிய அமைச்சர் பதவி ஏதாவது கொடுப்பார்கள்.
திமுகவை பொறுத்தவரை சீனியர்களின் மகன்களுக்கு போஸ்டிங் கொடுக்க வேண்டும். பல்வேறு முக்கிய அமைச்சர்களின் மகன்கள் கட்சிக்குள் வளர்ந்துவிட்டனர். அந்த வகையில் டி ஆர் பாலு மகன் டி ஆர் பி ராஜாவும் எம்எல்ஏ ஆகிவிட்டார்.
அவர் அமைச்சராக வேண்டும் என்று குரல்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அவர் திறமையானவர்தான். எல்லா கட்சியிலும் குடும்ப அரசியல் இருக்கிறது. எல்லா கட்சியிலும் மூத்த அரசியல் தலைவர்களின் மகன்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.
பாஜகவில் கூட குடும்ப அரசியல் இருக்கிறது. அந்த வகையில் டி ஆர் பி ராஜாவை அமைச்சராக்க திமுகவில் முயற்சி நடக்கும். டெல்டாவில் பெரிதாக அமைச்சர் இல்லை.
தஞ்சாவூரிலேயே அமைச்சர் இல்லை. பூண்டி கலைவானானும் இருக்கிறார். அவருக்கும் கூட கொடுக்கலாம். இரண்டு வருடம் கழித்து அமைச்சரவைக்கு புதிய லுக் கொடுக்க வேண்டும். ஒரே ஆட்கள் இருக்க கூடாது.
ஒரே ஆட்கள் இருந்தால் சிக்கல். ஜெயலலிதா போல உடனே உடனே மாற்ற கூடாது. இரண்டு வருடம் ஆகிவிட்டது. இப்போது மாற்றலாம். 2 வருடம் சில அமைச்சர்களுக்கு டைம் கொடுத்துவிட்டோம்.
இப்போது பிரஷ்ஷாக இறக்க வேண்டும். செயல்படாத அமைச்சர்களை மாற்ற வேண்டும். சீனியரோ, ஜூனியரோ தூக்கி போட தயங்க கூடாது. ஸ்டாலினிடம் ஏற்கனவே பிளான் இருக்கிறது. அமைச்சரவையை மாற்றுவது பற்றி அவர் ஆலோசனை செய்து வருகிறார்.
அவர் நடவடிக்கை எடுப்பார் என்று, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications