Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓபிஎஸ் தலைக்கு மேல் கத்தி.. ‘வந்ததே அங்க இருந்து தானே’.. சுப்ரீம் கோர்ட்டில் என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமா அல்லது நிராகரிக்குமா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே உச்ச நீதிமன்றத்திற்குச் சென்ற வழக்கை ஐகோர்ட் விசாரிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த மேல்முறையீடு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக அமையுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால் தான் எடப்பாடி தரப்பு மிகுந்த நம்பிக்கையோடு இருந்து வருகிறதாம். ஓபிஎஸ் எங்கு சென்றாலும் எடப்பாடி பக்கம் தான் ஜெயிக்கும் என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கூறிவருவதற்கும் இதுதான் காரணம் என்கிறார்கள்.

இதுதொடர்பாக, மூத்த சட்ட வல்லுநர்களின் கருத்துகளைக் கேட்டு விவாதித்து வருகிறாராம் ஓபிஎஸ். இதனால் தனக்கு எதுவும் பாதிப்பு வந்துவிடக் கூடாது என அழுத்தமாக தனது தரப்பு வழக்கறிஞர்களிடம் தெரிவித்து வருகிறாராம்.

நீதிபதி உத்தரவு ரத்து

நீதிபதி உத்தரவு ரத்து

ஈபிஎஸ் நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் ஆகஸ்ட் 17ஆம் தேதி தீர்ப்பளித்த தனி நீதிபதி, 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் நேற்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், பொதுக்குழு செல்லும் என்றும், தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் உத்தரவிட்டது.

திங்கட்கிழமை மேல்முறையீடு

திங்கட்கிழமை மேல்முறையீடு

இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த ஓபிஎஸ் உடனடியாக சென்னை கிளம்பினார். சென்னை வந்த அவர், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதையடுத்து, திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடனடியாக ஏன்?

உடனடியாக ஏன்?

ஓபிஎஸ் தரப்பு இந்த தீர்ப்பால் பின்னடைவைச் சந்தித்துள்ளதால் இதிலிருந்து மீண்டு, தனது செல்வாக்கைத் தக்க வைக்க, நீதிமன்றத்தை நாடுவது தவிர்க்க இயலாதது. சட்டப் போராட்டத்தில் வெல்வோம் என தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட வேண்டுமானால், மேல்முறையீடு செய்தாக வேண்டியது அவசியம் என முடிவெடுத்தே, ஓபிஎஸ் உடனடியாக சென்னை கிளம்பினார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?


ஓ.பன்னீர்செல்வம் சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை செய்து வரும் நிலையில், திங்கட்கிழமை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தால், எடப்பாடி பழனிசாமி தரப்பும் கேவியட் மனு தாக்கல் செய்யும். தொடர்ந்து, அவசர வழக்காக விசாரிக்குமாறு ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்படலாம். இது ஏற்கப்பட்டால், சில நாட்களுக்குள் விசாரணை தொடங்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

தீர விசாரிக்கப்பட்டதா?

தீர விசாரிக்கப்பட்டதா?

ஏற்கனவே உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற வழக்குதான் உயர் நீதிமன்றத்திற்கு ரிமாண்ட் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள்தான் உயர் நீதிமன்றம் தீர விசாரித்து, எந்த சாய்வும் இன்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டனர். அதன் அடிப்படையிலேயே விரிவான விசாரணை நடத்தப்பட்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில், நேற்று முந்தைய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.

உச்சநீதிமன்றம் ஏற்குமா?

உச்சநீதிமன்றம் ஏற்குமா?


உயர் நீதிமன்றம் தீர விசாரித்தே இந்த தீர்ப்பை அளித்ததாக உச்ச நீதிமன்றம் கருதினால், ஓபிஎஸ் அளிக்கும் மேல் முறையீட்டு மனுவை நிராகரிக்கவும் கூடும். ஆனால், உயர் நீதிமன்ற தனி நீதிபதியும், இரு நீதிபதிகள் அமர்வும் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்திருப்பதால், இதில் உச்ச நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கும் என்பது பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது.

பெரிய அடியாக இருக்கும்

பெரிய அடியாக இருக்கும்


ஒருவேளை, ஓபிஎஸ் மனு நிராகரிக்கப்பட்டால், அது அவருக்கு பெரிய அடியாக இருக்கும். விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், அதற்கேற்றபடி, வலுவான வாதங்களை எடுத்து வைக்க ஓபிஎஸ் தரப்பு மெனக்கெட வேண்டியிருக்கும். இதனால், இந்த மனுவில் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+