டாப் சீக்ரெட்! 1000+ அதிகாரிகள்.. போலீசுக்கே தெரியல! செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்துவது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அதிகாலையில் இருந்து நடத்தப்பட்டு வரும் சோதனை தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 நாட்களுக்கு முன் ஆளுநர் ஆர். என் ரவியை அவரது இல்லத்தில் சந்தித்தார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. மதுபான - கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் மனுவோடு சென்று எடப்பாடி, ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். இதற்காக அதிமுகவினர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

What are the reasons behind the Income tax department raid at Minister Senthil Balaji premises?

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் பலியாகி உள்ளார்.

இது போக தஞ்சாவூர், கீழவாசல் பகுதியில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட பாரில் மது அருந்திய இரண்டு பேர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அருந்திய மதுவில் சையனைடு கலந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து புகார் மனுவோடு சென்று எடப்பாடி, ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தார். இதற்காக அதிமுகவினர் இன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் செந்தில் பாலாஜியை குறித்து கடுமையான பல புகார்களை எடப்பாடி பழனிசாமி வைத்ததாக கூறப்பட்டது.

அண்ணாமலை புகார்:

அதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலையும் ஆளுநர் ஆர். என் ரவியிடம் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடுமையான புகார்களை வைத்து இருந்தார்.

செந்தில் பாலாஜியை முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அண்ணாமலை கடந்த ஆளுநர் ஆர். என் ரவியை சந்தித்து இது தொடர்பாக மனுவும் அளித்தார்.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஆளுநர் அவர்கள் உத்தரவிட வேண்டும் இதற்காகவும் ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளோம் என்று அண்ணாமலை கூறி உள்ளார்.

ரெய்டு:

இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது வருமான வரித்துறை மூலம் வளைக்கப்பட்டு உள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இரண்டு வீடுகளிலும் அதிக அளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் குவிந்து ரெய்டு நடத்தி வருகின்றனர். மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது. அவருக்கு நெருக்கமான ஒருவரையும் விடாமல் வருமான வரித்துறை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது

டாப் சீக்ரெட் - 1000 அதிகாரிகள்: மொத்தம் 1000 அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டு உள்ளனர். பொதுவாக இது போன்ற பெரிய ரெய்டுகள் 1 மாதத்திற்கு முன்பே திட்டமிடப்படும். அதேபோல்தான் இந்த முறையும் திட்டமிட்டு உள்ளனர்.

ஆனால் ரெய்டு குறித்த தகவல் எதுவும் வெளியே கசியாமல் டாப் சீக்ரெட்டாக பணிகளை செய்துள்ளனர். முறையான பிளானுடன் எங்கும் தகவல் கசியாமல் வருமான வரித்துறை இந்த ரெய்டை நிகழ்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. கரூர் எஸ்பி உள்ளிட்ட யாருக்கும் தெரிவிக்காமல் .. போலீஸ் பாதுகாப்பு கூட இல்லாமல்.. சீக்ரெட்டாக ரெய்டு செய்துள்ளனர்.

ரெய்டு

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

பல்வேறு டெண்டர் முறைகேடுகளை செய்ததாக செந்தில் பாலாஜி மீது பாஜக, அதிமுக சார்பாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

ஆனாலும் வருமான வரித்துறை இந்த ரெய்டிற்கான காரணம் குறித்து முறையான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+