நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு என்ன சின்னம்? தலைமை தேர்தல் அதிகாரி பதில்!
சென்னை: நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு என்ன சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி திடீரென உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 7 கட்டங்களாக நடந்த லோக்சபா தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் அது போல் நடத்தப்படவில்லை. தற்போது இன்றைய தினம் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் 13 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதனுடன் சேர்த்து விக்கிரவாண்டிக்கு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது முதலே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த நிலையில் ஜூன் 14 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி ஜூன் 21 ஆம் தேதி முடிவடைகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு தனி வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்திய வாக்கு இயந்திரங்களை மீண்டும் பயன்படுத்த மாட்டோம் என்றார்.
அப்போது அவரிடம் நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு மாநில கட்சி அந்தஸ்து கிடைக்கும் நிலையில் அவர்களுக்கு எந்த சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு சாஹு, "இந்த இரு கட்சிகளுக்கும் எந்த மாதிரியான சின்னத்தை வழங்க வேண்டும் என்பதை தலைமை தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்" என தெரிவித்தார்.
தமிழகம், புதுவையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி படுதோல்வி அடைந்தது. தமிழகம், புதுவையில் 39 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. வழக்கமாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறை புதிய சின்னம் ஒதுக்கப்பட்டது. மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது.
10 தொகுதிகளில் 40 ஆயிரம் வாக்குகளையும் 6 தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகளையும் 12 தொகுதிகளில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளையும் நாம் தமிழர் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சி 7 இடங்களில் 3ஆவது இடத்தை பெற்றது. நெல்லை தொகுதி, விளவங்கோடு சட்டசபை தொகுதி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகை, திருச்சி, புதுவை உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுகவை நாம் தமிழர் பின்னுக்கு தள்ளியது.
இந்த நிலையில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி 8.9 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8 சதவீத வாக்குகள் தேவை. அந்த வகையில் இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் என தெரிகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 6.58 சதவீதம் வாக்குகளை நாம் தமிழர் பெற்றிருந்தது.
இந்த தேர்தலில் சிவகங்கையில் அதிகபட்சமாக 1.63 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளது. இந்த தொகுதியில் எழிலரசி விசயேந்திரன் போட்டியிட்டார். கரும்பு விவசாயி சின்னம்தான் நாம் தமிழர் கட்சியின் சின்னமாக இருந்தது. சட்டசபை தேர்தலில் அந்த சின்னத்தில்தான் நாம் தமிழர் போட்டியிட்டது.
ஆனால் அதை லோக்சபா தேர்தலின் போது இழந்தது. காரணம் சட்டசபை தேர்தலில் தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட வாக்கு சதவீதம் இல்லை என்பதால் அந்த சின்னம் கிடைக்கவில்லை. அந்த சின்னத்தை கேட்டு நாம் தமிழர் கட்சிதான் முதலில் விண்ணப்பித்திருந்தது. ஆனாலும் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கவில்லை.
எனினும் இந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கிடைத்தது. ஒரு வேளை நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைத்திருந்தால் இன்னும் கூடுதல் வாக்குகளை பெற்றிருக்கக் கூடும் என தெரிகிறது. இந்த சின்னத்தை வைத்துக் கொண்டு கர்நாடகாவை சேர்ந்த அந்த கட்சி படுதோல்வி அடைந்தது.
அது போல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இந்த முறை மாநில கட்சி அந்தஸ்து வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவன், விழுப்புரத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை விசிக பெற உள்ளது. மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற, மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு 25 தொகுதிக்கும் ஒரு தொகுதியில் வெல்ல வேண்டும். அல்லது, மாநிலத்தில் பதிவாகும் ஓட்டுகளில் 8% வாக்குகளை பெற வேண்டும். அந்த வகையில், 2 தொகுதிகளில் வென்றதால் விசிகவுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications