"ஜிகர்தண்டா" சம்பவ குழுவில் "க்ளிண்ட் ஈஸ்ட்வுட்.." படத்தை பற்றி என்ன சொல்லி இருக்கார் பாருங்க.. மாஸ்
சென்னை: லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா XX படத்தில் ஹாலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட் குறித்து காட்சிகள் இடம் பெற்றிருந்த நிலையில், இது தொடர்பாக அவரே சில கருத்துகளைச் சொல்லி இருக்கிறார்.
லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா XX. இந்தப் படத்தின் டிரைலர் ரீலிஸ் ஆன போதே இதற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருந்தது.

இந்தப் படமும் அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தது. இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியானது. அப்போது முதலே பலரும் இந்தப் படத்தைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.
ஜிகர்தண்டா XX: இந்தப் படத்தில் நடிகர், இயக்குநர் எனப் பல முகங்களைக் கொண்ட கிளின்ட் ஈஸ்ட்வுட் காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.. 92 வயதான கிளின்ட் ஈஸ்ட்வுட் ஹாலிவுட்டில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்தவர்களில் ஒருவர். குறிப்பாக கவ்பாய் படங்களில் கிளின்ட் ஈஸ்ட்வுட் தனக்கென தனியாக ஒரு முத்திரையைப் பதித்திருந்தார். அவரை மரியாதை செலுத்தும் வகையிலான காட்சிகளும் ஜிகர்தண்டா XX படத்தில் இடம்பெற்றிருக்கும்.
குறிப்பாக ராகவா லாரன்ஸ் அல்லியஸ் சீசராக என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.. க்ளின்ட் ஈஸ்ட்வுட் தனது திரைப்பட ஷூட்டிங்கிற்காக மதுரை வந்திருந்தார் என்றும் அப்போது ஷூட்டிங்கில் லாரன்ஸ்தான் அவரது உயிரைக் காப்பாற்றினார் என்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அதற்காக கேமரா ஒன்றை லாரன்ஸுக்கு க்ளின்ட் ஈஸ்ட்வுட் பரிசு கொடுத்தது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். மேலும், லாரன்ஸுக்கு அல்லியஸ் சீசர் என்ற பெயரையே அவர் தான் வைத்திருப்பார்.
கிளின்ட் ஈஸ்ட்வுட்: இந்தப் படத்தில் இப்படி பிரபல கிளின்ட் ஈஸ்ட்வுட் மற்றும் பாலிவுட் இயக்குநர் சத்யஜித் ரே ஆகியோருக்கு மரியாதை செலுத்துவது போன்ற காட்சிகள் இருக்கும். இதற்கிடையே எக்ஸ் தளத்தில் ஒருவர், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தைப் பார்க்குமாறு கிளின்ட் ஈஸ்ட்வுட்டை வலியுறுத்தினார். அதற்கு யாருமே எதிர்பார்க்காத வகையில் கிளின்ட் ஈஸ்ட்வுட் பதிலும் அளித்துள்ளார். இதில் விஷயம் என்னவென்றால் அவருக்கு ஏற்கனவே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் குறித்துத் தெரிந்து இருக்கிறது.
விஜய் என்ற அந்த நபர் தனது எக்ஸ் பக்கத்தில் கிளின்ட் ஈஸ்ட்வுட்டை டேக் செய்து, "அன்புள்ள கிளின்ட் ஈஸ்ட்வுட், நாங்கள் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளோம். அது இப்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கிடைக்கிறது. இந்த படத்தில் நாங்கள் உங்களுக்கு மிகச் சிறந்த மரியாதை அளித்துள்ளோம். சில அனிமேஷன் காட்சிகளை வைத்து உங்கள் இளம் வயது கேரக்டரை உருவாக்கியுள்ளோம். நேரம் கிடைத்தால் இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பாருங்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
என்ன சொல்லி இருக்கார்: இதற்கு கிளின்ட் ஈஸ்ட்வுட் பதிலளித்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், "கிளின்ட் ஈஸ்ட்வுட்டிற்கு இந்தப் படம் குறித்து ஏற்கனவே தெரியும். அவர் தனது புதிய திரைப்படமான ஜூரி 2 படத்தை முடித்தவுடன் இதைப் பார்ப்பதாகச் சொல்லி இருக்கிறார்" என்று அவர் தெரிவித்தார்.
கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் இந்த ட்வீட் இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், இதனை இயக்குநர் கார்த்திக் சுப்ராஜ், நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
