நியூஸ் பேப்பர் கொடுங்க.. முகத்தை மூடணும்.. போலீசிடம் ஸ்ரீகாந்த் சொன்னது என்ன? பின்னணி!
சென்னை: போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் போலீசாரிடம் ஸ்ரீகாந்த் சொன்னது என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
வரும் ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி தயாளன் உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட அவரை காவலில் எடுத்து விசாரிக்க விரைவில் போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.
போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், 8 முறை போதைப் பொருள் வாங்கி கொடுத்ததாக கூறப்படும் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. நுங்கம்பாக்கம் பப்-ல் தகராறு, வேலை வாங்கித் தருவதாக மோசடி என மொத்தம் 5 வழக்குகளில் ஏற்கனவே கைதாகி குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் உள்ளார் பிரசாத்.
போலீசாரிடம் ஸ்ரீகாந்த் சொன்னது என்ன?
இந்த நிலையில் போலீசாரிடம் ஸ்ரீகாந்த் சொன்னது என்ன என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக கைதாகி சிறைக்கு செல்லும் நேரங்களில், கோர்ட்டுக்கு செல்லும் நேரங்களில் பிரபலங்களாக இருக்கும் பட்சத்தில்.. அவர்கள் தங்களின் முகத்தை மூடிக்கொள்ள கோரிக்கை வைப்பார்கள்.
டிவிகளில் வரக்கூடாது என்று நினைப்பவர்களும் கூட இதே கோரிக்கைகளை வைப்பார்கள். அப்படிதான் ஸ்ரீகாந்த் போலீசாரிடம் முகத்தை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அவர் சொன்னபடியே நியூஸ் பேப்பர் கொடுத்து அவரின் முகத்தை மூடிக்கொள்ள போலீசார் அனுமதித்துள்ளனர். போலீசில் இவர் தந்த வாக்குமூலத்தில் அதிமுக நிர்வாகி பிரசாத் பற்றி முக்கியமான தகவல்களை சொன்னதாக கூறப்படுகிறது.

ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் போதைப்பொருள் வாங்கியதாக தகவல் வெளியானதை அடுத்து ஸ்ரீகாந்த்திடம் நேற்று சோதனை செய்யப்பட்டது. இவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில், இவர் மூலமாக இன்னும் சில நடிகர்கள் சிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மூலம் இவர் வழக்கில் சிக்கியதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் ஏற்பட்ட சண்டையில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டார். இவருடன் அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், மற்றும் ரவுடி சுனாமி சேதுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. தற்போது இந்த வழக்கில் கைதான அவரிடம் இருந்த போன் ஆதாரங்களின்படி அவர் போதை பொருள் விற்றதாக கூறப்படுகிறது.
போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் மீதான விசாரணை
முக்கியமாக பிரசாத் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் புகார்கள் வந்தன. அதாவது அவர் சென்னையில் போதை பொருள் டீலர் போல செயல்பட்டு வந்துள்ளார். அவர் யாரிடம் போதைப்பொருளை வாங்கினார், யாருக்கு விநியோகம் செய்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமார் என்பவரையும் விசாரித்தனர். அப்போது, பிரதீப் மூலமாக ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் வழங்கியதை பிரசாத் ஒப்புக்கொண்டார். கிட்டத்தட்ட இவர்கள் கொக்கைன் டீலர்களாக செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி
இவரிடம் பல நடிகர்கள், நடிகைகள் போதைப்பொருள் வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த், கிளப் மற்றும் பார்களில் நடக்கும் விருந்துகளில் கலந்து கொண்டதாகவும் அதன் மூலம் அதிமுக நிர்வாகி இவரிடம் போதை பொருட்களை விற்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு கிராம் கொக்கைனை ரூ.12,000-க்கு இவர் விற்றதாக கூறப்படுகிறது.
கொரோனா காலகட்டத்தில் இருந்து 40 முறை போதைப்பொருளை பயன்படுத்த அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் ஸ்ரீகாந்த் வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி பிரசாத், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் Say No To Drugs என்று திமுகவை விமர்சனம் செய்ய வேண்டும் என்று போட்டுவிட்டு அதிமுக நிர்வாகியே போதை பொருள் வழக்கில் சிக்கி இருப்பது விமர்சனங்களை சந்தித்துள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications